பயிர் பாதுகாப்பு :: மரவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வெள்ளை ஈ: பெமீசியா டபாசி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • முதலில் வெண்புள்ளிகள் தோன்றி பிறகு அவை ஒன்றாக இணைத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • கடுமையாக தாக்கப்பட்ட செடிகளை முதிரா நிலையில் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிடும்
  • கரும்புகை பூசணத்தை ஏற்படுத்தும்
  • நரம்பு வெளத்தல்  மஞ்சள் நரம்பு தேமல் நோய்யை பரப்புகின்றது.
  • மரவள்ளிதேமல் நோயை பரப்பும்

பூச்சியின் விபரம்: 

  • முட்டை: இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில் காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள் நிற முட்டை காணப்படும்.
  • இளம்குஞ்சுகள்: முட்டை பொரித்தவுடன் வெளிவரும் இளம் குஞ்சுகள் நீள வட்ட வடிவில் மரவும் பூச்சி போன்று பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன் இருக்கும்.
  • முதிர்பூச்சிகள்: சிறு வெண்ணிற பூச்சிகள், இலைகளில் அடைஅடையாக மாவுப்பூச்சிகளை போன்று காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை: 

  • துத்தி (அபுட்லான் இண்டிகம்) செடிகளை வயலிருந்து அகற்ற வேண்டு்ம்.
  • மஞ்சள் நிற ஒட்டும் பொறிகன்ள கொண்டு வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்.
  • பின்வரும் பூச்சிக்கொல்லிகள் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
    • ஃபாசலோன் 35 EC @2.5 லிட்டர்/ஹெக்டேர்
    • குவினால்பாஸ் @2.0 லிட்டர்/ஹெக்டேர்
    • ட்ரைஅசோஃபாஸ் @2.0 லிட்டர்/ஹெக்டேர்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016