பயிர் பாதுகாப்பு :: மரவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சுருள் வடிவ வெள்ளை ஈ: அலிரோடைகஸ் டிஸ்பர்சஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • செடிகளில் கீழ்பாகத்தில் உள்ள இலைகளில் கரும்புகைப்பூசணம் தோற்றுவிக்கும்
  • தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: வட்டவட்டமாக இலைகளின் அடிப்பரப்பில் இட்டு வெண்ணிற மாவுப்பூச்சால் மூடியிருக்கும்
  • இளம்குஞ்சுகள்: உடலில் மெழுகால் ஆன கண்ணாடி போன்ற உருளைகள் சமச்சீரான இடைவெளியில் காணப்படும்
  • பூச்சி: மாவு போன்ற வெண்ணிறமானது. அதிகாலையில் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்

கட்டுப்படுத்தும் முறை: 

  • துத்தி (அபுட்லான் இண்டிகம்) செடிகளை வயலிருந்து அகற்ற வேண்டு்ம்.
  • மஞ்சள் நிற ஒட்டும் பொறிகன்ள கொண்டு வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016