| பயிர் பாதுகாப்பு :: புகையிலை பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
             புகையிலைககாளான்: 
  - ‘பேய்க்       காளான்’ என்று ஆங்கில மொழி பேசும் நாடுகளிலும், ‘டோக்ரா’ என்று வட இந்தியாவிலும்,       ‘வகும்பா’ என்று குஜராத்திலும், ‘பாம்பாக்கு’ என்று மகாராஷ்டிராவிலும், ‘புகையிலைக்       காளான்’ என்று தமிழ்நாட்டிலும், ‘போடு’ அல்லது ‘மல்லே’ என்று ஆந்திரப் பிரதேசத்திலும்       அழைக்கப்படுகிறது. 
 
              - பூக்கும்       ஒட்டுண்ணியாக புகையிலைப் பயிரின் வேர்களில் இருக்கும். இந்தியாவின் அனைத்து புகையிலைப்       பயிரிடும் பகுதிகளிலும் காணப்படும். 
 
              - இது ஒரு       முழு ஒட்டுண்ணி. இதற்கு தேவையான உணவை புகையிலைப் பயிரின் வேரிலிருந்து உறிஞ்சுறுப்புக்கள்       மூலம் எடுத்துக் கொள்கிறது. 
 
              - விளைச்சலில்       இழப்பு இலையின் தரம் 30-70 சதவீதம் தமிழ்நாட்டிலும், 10-50 சதவீதமாக மாற்ற மாநிலங்களிலும்       இருக்கிறது 
 
              - சி.டி.ஆர்.ஐ.       ராஜமுத்திரியில் நடத்தப்பட்ட சோதனையில் தாக்கத்தின் காலம் மண்ணின் ஈரப்பதத்தைப்       பொறுத்து 20-50 சதவீதம் விளைச்சல் இழப்பு ஏற்படும் என்று அறியப்பட்டுள்ளது. 
 
            | 
              
             
  | 
           
          
            அறிகுறிகள் 
              
                - ஆரம்ப       காலத் தாக்குதலில், இலைகள் வாடி, தலைகுனிந்து நிற்கும். 
 
                - 5 முதல்       6 வார காலப் பயிர்களில், இந்தக் காளான் புகையிலைப் பயிரின் அடிப்பகுதியிலிருந்து       வெளிவர ஆரம்பிக்கும் . 
 
                - எண்ணற்ற       காளான் குருத்துக்கள் பயிரைச் சுற்றித் தோன்றும். 
 
                - குட்டையான       வளர்ச்சியுடன், இலைகள் வாட ஆரம்பிக்கும். பயிரின் கடைசி பருவத்தில் தாக்குதல்       இருந்தால் அறிகுறிகள் தெரியாது. ஆனால் விளைச்சல் மற்றும் இலையின் தரம் குறைந்து       காணப்படும். 
 
                - 15-45       செ.மீ உயரத்துடன், வெளிர் பழுப்பு அல்லது ஊதா நிறத்துடன் கொத்தாகத் தோன்றும். 
 
                - 10 முதல்       15 குருத்துக்கள் ஒரு ஊன் வழங்கியின் வேரைச் சுற்றி இருக்கும். 
 
                - இந்தியாவில்       2 வகைகள் உள்ளன. முறையே ஒரபாங்கி செர்னூவா, ஒரபாங்கி இண்டிகா. 
 
                - ஒரபாங்கி       செர்னூவா மிகவும் மோசமான ஒட்டுண்ணி, சொலானே சியஸ் பயிர்களை மட்டும் தாக்கும். 
 
                - இந்த குடும்பத்திலுள்ள       மற்ற ஒம்புயிரிகள் - உதாரணமாக, கன்னாபின்னாஸியே, கம்போஸிட்டே, யூஃபோர்பியேஸே,       டில்லியஸியே. 
 
                - கேப்ஸிகப்       ஆனம் (மிளகாய்), டிரைடாக்ஸ் புரொகம்பன்ஸ் இந்த காளான் விதைகளின் முளைப்பை ஒட்டுண்ணியாக       இல்லாமலேயே ஊக்குவிக்கிறது. 
 
               
              கட்டுப்பாடு 
              
                - நோய்க்கிருமி       உண்டாவதற்கான சாத்தியத்தைத் தடுக்க வேண்டும். 
 
                - இளம் காளான் குருத்துக்களை விதை வருவதற்கு முன்பே, வாரம்       ஒரு முறை கைகளால் பிடுங்கி விட வேண்டும். 
 
                - இவ்வாறு       செய்வதால் இதன் அடர்த்தி 2 வருடத்தில் 85 சதவீதமும், 4 வருடத்தில் 96 சதவீதமும்       குறைக்கப்படுகிறது. 
 
                - அவ்வப்போது       வெளிவருகிற காளான்களை கைகளால் பிடுஞ்கி விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு விவசாயியும்       குறைந்தது 4 வருடத்திற்கு செய்யும் போது இதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். 
 
                - புகையிலைப்       பயிரைத் தொடர்ந்து சோளம் அல்லது எள் பயிரை காரிப் பருவத்தில் பயிரிட வேண்டும் 
 
                - ஆனால்       மிளகாய் வலைப் பயிராக இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஸினாபிஸால்பாவை       புகையிலைப் பயிர்க்கு முன் பயிரிடுவதால் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம். 
 
                - காலம்       தள்ளி பயிரிடுவதாலும் இதன் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் மண்ணின் ஈரப்பதம் குறைவதால்       பயிரின் வளர்ச்சி பாதிக்கும். 
 
              | 
           
               
  |