தேமல் நோய்: புகையிலை தேமல்  நச்சுயிரி 
                அறிகுறிகள் 
            
              - இலைகளில்  அடர்பச்சை நிறமும் வெளிர்ப் பச்சை நிறமும் கொண்ட பகுதிகளில் தோன்றுவதால் தேமல் போன்ற  தோற்றத்தைக் கொடுக்கும். இலைப்பாகம் சிறுத்துவிடும். இலைகள் அடிப்பாகத்தை நோக்கிச்  சுருண்டிருக்கும்.
 
              - பாதிக்கப்பட்ட  செடிகள் வளர்ச்சி குன்றிக் குட்டையாக இருக்கும். இலைப்பரப்பு சிறுத்தும் பெருத்தும்  உள்ள ஒழுங்கற்ற வடிவத்தைக் கொண்ட இலைகள் தோன்றும்.
 
              - இலையின்  நடுநரம்பிலிருந்து இருபுறத்திலும் ஒரு பகுதி சிறுத்தும் ஒரு பகுதி பெருத்தும் இருப்பதோடல்லாமல்  சில இலைகளில் இலைப்பரப்பு முழுவதுமே வளராமல் நரம்பு மட்டும் காணப்படும். இத்தோற்றம்  எலிவாலின் அமைப்பைப் போன்றிருக்கும்.
 
              - நோய்  கண்ட செடியின் பாகங்கள் நிலத்தில் தங்கியிருப்பதால் அவற்றின் நச்சுயிரிகள் தங்கியிருக்கும்  காய்ந்த செடியின் பாகங்களிலும் 25 ஆண்டுகள் வரை தங்கியிருந்த நோயினைப் பரப்பும் ஆற்றலுள்ளவை.
 
              - நிலத்தில்  பணியாற்றுபவர்கள் மூலமும் கருவிகள் மூலமும் நோய் கண்ட செடிகளிலிருந்து பிற செடிகளுக்குத்  தோன்றுகின்றன.
 
              - நச்சுயிரி  காய்ந்த புகையிலை, சுருட்டு, சிகரெட் போன்றவற்றிலும் கூட அழியாமல் இருந்து பிற இடங்களுக்குப்  பரவுகின்றன.
 
              - செங்கிழங்கு  சீமை அவரை, தக்காளி, கத்தரி, ஊமத்தை, மிளகரய், மணத்தக்காளி, பெட்Þனியா மற்றும் பல செடிகளையும்  இந்நச்சுயிரி எளிதில் தாக்குகின்றது.            
 
            கட்டுப்பாடு 
            
              - அறுவடையிலும்  நோய் கண்ட செடியின் பாகங்கள் நிலத்தில் தங்கவிடாது அப்புறப்படுத்தி எரித்து விடுதல்  சிறந்தது.
 
              - நோயுண்ட  செடியைத் தொட்டபின் பிற செடிகளைத் தொடாமலிருப்பதன் மூலமும், கைகளைச் சோப்பினைப்  பயன்படுத்தி சுத்தம் செய்தல் மூலமும் நோய் பரவுவதைக் குறைக்கலாம். இந்நோய் தோன்றும்  களைச் செடிகளை முழுவதுமாக அழிக்க வேண்டும்.
 
              - பயிர்  சுழற்சி முறையை 2 வருடத்திற்கு கடைபிடிக்க வேண்டும்.
 
              - நோய்  எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களை டிஎம்விஆர்ஆர் - 2 மற்றும் டிஎம்விஆர்ஆர் - 3, டிஎம்விஆர்ஆர்  - 2எ போன்ற இரகங்களை பயன்படுத்தலாம்.
 
              | 
              
  |