தவளைக் கண் இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போ ஃநிக்கோட்டியானே 
                அறிகுறிகள் 
            
              - இந்நோய்  இடி இலைகளில் ஏற்படுகின்றது.
 
              - இலைப்புள்ளிகள்  வட்டவடிவமாகவும், பழுப்பு நிறத்திலும் மத்தியில் வெள்ளை நிறத்திலும் தவளைக் கண் போன்று  தோற்றமளிக்கிறது.
 
              - ஈரப்பதமான  இடங்களில் வெளிக்கோடுகள் கோண வடிவத்திலும் மத்தியப் பகுதி வெண்மை  நிறமற்றும் காணப்படுகிறது.
 
              - அதிகப்படியான  மழை பெய்யும் பகுதியில் இறந்த செல்களை உடைய பகுதிகளும், கோடைக்காலங்களில் தவளைக் கண்  போன்ற பகுதி குண்டூசி போல் காட்சியளிக்கும்.
 
              - இலையின்  நுனிப்பாகத்திலும் ஓரத்திலும் உள்ள புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து ஓரம் கருகி இலைகள்  நாளடைவில் உதிர்ந்துவிடுகின்றன. 
 
              - புகையிலையின்  விளைச்சலும் தரமும் இந்நோயினால் குறைகின்றன.
 
               
            கட்டுப்பாடு 
            
              - நாற்றாங்கால்  மேடைப்பாத்திகளை பாதிக்கப்பட்ட வயல்களுக்கு அருகில் அமைக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட  பகுதிகளை அப்புறப்படுத்தவேண்டும்.
 
              - அளவுக்கு  அதிகமான தலைச்சத்தை பயன்படுத்தக்கூடாது. முதிர்ந்த இலைகளை மட்டும் அகற்றவேண்டும். அப்படி  அகற்றினால் இலைப்புள்ளி  நோய் வருவது குறைகிறது.
 
              - போர்டோக்  கலவை 0.4 சதவிகிதம் (4 கிராம் / லிட்டர்), சினெப் 0.2 சதவிகிதம் (2 கிராம் / லிட்டர்)  அல்லது 0.1 சதவிகிதம் (1 கிராம்  / லிட்டர்),  பினோமைல் ஆகிய மருந்தைப் பயன்படுத்தலாம்.
 
            | 
              
                
               |