சாம்பல் நோய்: எரிசிபெ கைகோரெசியாரம்  வகை நிக்கோட்டியானே 
                அறிகுறிகள் 
            
              - முதலில்  சாம்பல்நிறம் கலந்து வெண்மையான புள்ளிகள் கீழ் இலையின் அடிப்பாகத்தில் காணப்படுகிறது.
 
              - குறைந்த  வெப்பநிலை மற்றும் அதிக குளுமையான நேரத்தில் இப்புள்ளிகள் மேல் இலைகளுக்க பரவி இலை  முழுவதும் காணப்படுகிறது.
 
              - இவ்வாறான  இலைகள் பதப்படுத்தப்படும் போதும் எரிந்தும் பழுப்பு நிறத்திலும் காணப்படுகிறது.
 
           
            
கட்டுப்பாடு 
            
              - அதிகமான  உரம் மற்றும் அதிகமாக செடிகளைத் தவிர்க்கவும். பாதிக்கப்பட்ட அடி இலைகளை அகற்றவும்.
 
              - சற்று  முன் பருவத்திலேயே நடவு செய்யவேண்டும்.
 
              - கந்தகத்  தூளை 40 கிலோ / எக்டர் என்ற அளவில் சாம்பல் அல்லது மணலுடன் கலந்த நட்ட 6 முதல் 8 வாரத்திற்குள்  பயன்படுத்தலாம்.
 
              - 0.2  சதவிகிதம்  கராத்தேன் அல்லது தியோவிட் அல்லது  0.05 சதவிகிததம்  கார்பன்டாசிம் ாநய் உருவாகும்  முன் 10-12 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
 
              - நோய்  எதிர்ப்புத்தன்மை உடைய இரகங்களான ஸ்வர்ணா அல்லது லைன் 2359 பயிரிடலாம்.
 
              |