| பயிர் பாதுகாப்பு  :: சர்க்கரைவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            | ஆமை வண்டுகள்:  ஆஸ்பிடோமார்ஃபா மிலியாரிஸ், கேசிடா சர்க்கம்டேட்டா, கைரிடா ஃபைஃபங்டேட்டா | 
           
          
            தாக்குதலின் அறிகுறிகள்:
              
                - இளம்      புழுக்கள் இலைகளை அரித்து சல்லடைபோல் செய்திருக்கும்.
 
                - வளர்ந்த      புழுக்கள் மற்றும் வண்டுகள் இலைகளில் வட்டவடிவ துளையிட்டு சாப்பிடும்.
 
               
              பூச்சியின் விபரம்:  
              
                - வண்டின்      புழு: நீள்வட்ட தட்டையான      மஞ்சள் நிற வடிவமுடையது. உடல்முழுவதும் முட்கள் கொண்டிருக்கும்.
 
                - கூட்டுப்புழு: புழுக்களை விட முட்கள் குறைவாக கொண்ட்ருக்கும்.      இலைகளின் மேற்பரப்பில் ஒட்டியிருக்கும்.
 
                - வண்டுகள்:
 
                
                  - ஆஸ்பிடோமாஃபா       மிலியாரிஸ் :       வண்டு தட்டையாகவும், நீள்வட்ட வடிவில் இருக்கும். உடலின் மேல்பாகத்தில் நடுவே       சிவப்பாகவும் சுற்றிலும் நிறமற்றதாகவும் இருக்கும்.
 
                  - கேசிடா       சர்க்கம்டேட்டா :       வண்டு தட்டையாகவும் நீளவட்டவடிவில் இருக்கும், உடல் பச்சை கலந்த மஞ்சள் நிறத்திலும்       அதன் மேற்பரப்பில் பச்சை நிறத்தில் பிறை நிலாவடிவ கோடுகள் காணப்படும்
 
                  - கைரிடா       பைஃபங்டேட்டா :       உலோக பச்சை  நிற  உடலின் மேற்பரப்பில் 6 கரும்புள்ளிகளை         கொண்டிருக்கும்.
 
                 
               
               | 
                             | 
           
          
             | 
           
          
            கட்டுப்படுத்தும் முறைகள்: 
              
                - வண்டின்      புழுக்கள் சேகரித்து அழிக்கவும்
 
                - ஏக்கருக்கு      மாலத்தியான் 200மி.லி தெளிக்கவும்
 
                - பூச்சி      தாக்காத கிழங்குகளை உபயோகப்படுத்தவேண்டும்.
 
                - மஞ்சள்      ஒட்டும் அட்டை எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும்.
 
                - ஒரு      எக்டருக்கு கார்பரில் 1.25 கிலோ 21 நாட்களுக்கு ஒரு      முறையாக, கிழங்குகள் எடுக்க ஆரம்பித்ததலிருந்த தெளிக்கவேண்டும்
 
              | 
           
         
        
         
 |