| பயிர் பாதுகாப்பு  :: சர்க்கரைவள்ளி பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
             கிழங்கு  கூண் வண்டு : சைலஸ ்ஃபார்க்கேரியஸ் 
                தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - கொடிகள்      வீக்கமடைந்தும், உருக்குலைந்தும் இருக்கும். சிலநேரங்களில் கொடிகளில் வெடிப்புகள்      காணப்படும்.
 
                - தாக்கப்பட்ட      கொடிகள், நிறமாறியும், வெடிப்புகளும் இருக்கும் மேலும் வாடியும் காணப்படும்.
 
                - தாக்கப்பட்ட      கிழங்குகளில் குழிகளும், துளைகளும் கொண்டிருக்கும்.
 
                - தாக்கப்பட்ட      கிழங்குகள் நுரைப்பஞ்சு போன்றும், கரும்பழுப்பு நிறத்திலும் தோற்றமளிக்கும்.
 
                - தாக்கப்பட்ட      கிழங்குகள் மேற்பகுதியிலிருந்து அழுக ஆரம்பிக்கும். மேலும் துர்நாற்றத்தையும்      கசப்பான சுவையும் உருவாக்கும்.
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை: மஞ்சள் கலந்த வெண்ணிற, நீர்வட்ட வடிவில்      இருக்கும். கொடி மற்றும் வேர்களில் சிறு குழியை ஏற்படுத்தி அதனுள் முட்டையிட்டு      மேற்படுகுதியை தாய் வண்டின் கழிவுகளால் மூடி விடும்.
 
                - புழு: வெண்ணிற கால்களற்ற பழுப்பு நிறத்தலையுடன்      உடைய வண்டினப்புழு.
 
                - கூட்டுப்புழு: வெண்ணிறத்தில் கொடிகளின் துளைகளில்      இருக்கும்.
 
                - வண்டு: வண்டு எறும்பைப் போல் உடல் சிறுத்து      நீளமாக கூர்மையான மூக்குடன், கருநிற தலையும், கருஞ்சிவப்பு உடலும் கொண்டிருக்கும்.
 
               
               | 
            
               | 
           
          
            கட்டுப்படுத்தும் முறை:  
              
                - பயிர்      சுழற்ச்சிக்கு நெல்லை பயிரிட வேண்டும்
 
                - பூச்சிகளற்ற      கொடிகளை நடவுக்கு தேர்வு செய்ய வேண்டும்
 
                - முதிர்ச்சியடைந்த      செடிகளை உடனடியாக அறுவடை செய்ய வேண்டும்
 
                - மண்ணில்      வெடிப்புகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்
 
                - அறுவடை      செய்து 48 மணிநேரம் கழித்து பரவல் நீர்பாய்சனம் மூலம் நீர்பாய்ச்சி வயலில் மீதமுள்ள      செடிகளை அழுகச் செய்தும், வண்டுகளை மூழ்கடித்தும், வண்டுகளின் எண்ணிக்கை குறைக்கலாம்
 
                - மாற்று      உணவுப்பயிர்களான சர்க்கரை வள்ளி குடும்பத்தைச் சேர்ந்த (Ipomea sp) செடிகளை அகற்ற வேண்டும்
 
                - நடவுக்கொடிகளை      பெனிட்டோரோதையான்      50 EC @2 மி.லி/லி நீர்கலவையில் நனைத்து நட வேண்டும்
 
                - ஹெக்டேருக்கு      3 டன் யுப்டோரியம்இலைகளை நிலப்போர்வையாக நட்ட 30 நாட்கள் கழித்து போட வேண்டும்
 
                - நட்ட      50வது மற்றும் 80வது நாட்களில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக வெட்டி      ஆங்காங்கு வயலில் போட்டு வைத்து அதற்கு கவரப்படும் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம்
 
                - விளக்குப்பொறி      வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்
 
                - விளக்கு பொறிகளை 5 மிட்டர் இடைவெளியில் வயலில் மாலை 4 மணியளவில் வைத்து விட.பிறகு அடுத்த நாள் காலையில் பொறியில் விழுந்துளள் வண்டுகளை சேகரித்து அழிக்கலாம்
 
                - நட்ட 50வது நாள் கொடிகளுக்கு மண் அனைக்க வேண்டும்
 
              | 
           
         
        
         
 |