சார்கோல் அழுகல்: மேக்ரோபோமினா  பேசியோலினா 
           
              
                
                  அறிகுறிகள்
                    
                      - செடிகள்       திடீரென்று காய்ந்து விடும்
 
                      - இந்நோயினால்       பாதிக்கப்பட்ட செடிகள், காய்ந்தும், தண்டின் அடிப்பகுதியில் கருப்பு நிற கோடுகளும்       காணப்படுகின்றன.
 
                      - பாதிக்கப்பட்ட       பகுதியில் சிறிய ஸ்கிலிரோசியஸ் காணப்படும்.
 
                      - சில       நேரங்களில் நாற்றழுகல், வேரழுகல்  காணப்படும்.
 
                   
                    கட்டுப்பாடு 
                    
                      - கோடையில்  ஆழமாக உழுதல், பயிர்  சுழற்சி முறையை மேற்கொள்ளுதல்.  
 
                      - மண்ணுடன்  தொழுஉரம் 12.5 டன் / எக்டர் என்ற அளவில் கலந்து இடவும்.
 
                      - முந்திய  பயிரின் கழிவுகளை அழிக்கவும்.
 
                      - கார்பன்டாசிம்  1 கிராம் / லிட்டர் அல்லது  சூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் / டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ  / எக்டர்  என்ற அளவில் அதனுடன் 50 கிலோ தொழு  உரம் கலந்து இடுதல் ஆகியன கட்டுப்பாட்டை கொடுக்கும்
 
                    | 
                    
                    | 
                 
              |