அல்டர்னேரியா  கருகல் : அல்டர்னேரியா ஹீலியன்தி 
            
              - இந்நோய்  பயிர் செய்யப்படும் எல்லா இடங்களிலும் பரவியுள்ளது.
 
              - விதை  மற்றும் எண்ணெய் மகசூலை பாதிக்கிறது.
 
           
            அறிகுறிகள் 
            
              - இலைகளில்  அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் வட்ட வடிவ புள்ளிகள் தோன்றுகின்றன.
 
              - இப்புள்ளிகளைச்  சுற்றி செல்கள் இறந்து காணப்படும். வட்ட வடிவ வளையம் போன்ற கோடுகளும் மத்திய வெண்மையான  பகுதியும் இருக்கும்.
 
              - புள்ளிகள்  முதலில் அடி இலைகளிலும், பின்னர் மேல் மற்றும் மத்திய இலைகளிலும் பரவிக் காணப்படும்.
 
              - பின்னர்  இப்புள்ளிகள் இலைக்காம்புகளிலும் தண்டு மற்றும் பூக்களின் பாகங்களிலும் பரவிக் காணப்படும்.
 
             
            கட்டுப்பாடு 
            
              - விதைக்கப்படும்  பருவக்காலத்தைப் பொறுத்து நோயின் நிலை மாறுபடும்.
 
              - செப்டம்பர்  மாத இடையில் விதைத்தால் இந்நோயின் தாக்குதிலிருந்து விடுபடலாம்.
 
              - மேங்கோசெப்  0.3 சதவிகிதம், 4 முறை 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
 
              | 
             
               
               |