| பயிர் பாதுகாப்பு  :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  | பீகார் கம்பளிப்  பூச்சி : ஸ்பைலோசோமா அப்லிக்வா | 
                 
                
                  அறிகுறிகள்:  
                    
                      - இளம்புழுக்கள் இலையின்      அடிப்பகுதியில் காணப்படும். இலை மிகத் தீவிரமாக இலைகளை உண்ணும்.
 
                      - தீவிரத் தாக்குதலின்      போது இலைகள் உதிர்ந்துவிடும்
 
                      - தாக்கப்பட்ட இலைகள்      காய ஆரம்பிக்கும்
 
                     
                    பூச்சியின் விபரம்: 
                    
                      - முட்டை: இலையின் அடிப்புறத்தில்      கூட்டமாக இடப்படும்
 
                      - புழு: நீளமாக மஞ்சள் முதல்      கருப்பு நிறமுடன் முடிகளால் சூழப்பட்டிருக்கும்
 
                      - பூச்சி: பழுப்புநிறத்துடன்,      சிவப்பு நிற வயிறுடன் காணப்படும்.இளஞ்சிவப்பு நிற இறக்கைகளுடன், எண்ணற்ற கரும்புள்ளிகளுடன்      காணப்படும். 
 
                     
                    கட்டுப்பாடு:  
                    
                      - ஆழமாக கோடை உழவு செய்தல்
 
                      - நன்றாக மக்கிய உரங்களை      பயன்படுத்துதல்
 
                      - பட்டாணி பயருடன்      2:1 என்ற விகித்தில் ஊடு பயிரிடலாம்
 
                      - புழுக்களை சேகரித்து,      அழிக்க வேண்டும்.
 
                      - பேசலோன் 35 கிகி      1000 மிலி/ஹெக்டர் என்ற அளவில் தெளித்தல்
 
                    | 
                   | 
                 
              | 
           
         
  |