| பயிர் பாதுகாப்பு  :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
                
                  | தலைத்  துளைப்பான்: ஹெலிக்கோவெர்பா ஆர்மிஜெரா | 
                 
                
                  
                      
                        அறிகுறிகள்:
                          
                            - தலை பகுதியின் உள்ளே      புழு துளை செய்தல்
 
                            - நன்றாக வளர்ந்த விதைகளின்      மீது புழுக்கள் உண்டு, தலை பகுதியை துளை செய்யும்.
 
                            - பூஞ்சான் உருவாகி, தலைப்பகுதி      அழுக ஆரம்பிக்கும்
 
                            - வளர்ச்சியின் ஆரம்பநிலையில்      புழுக்கள் இலைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்து பின் தலைப்பகுதியைத் துளைக்கும்
 
                          | 
                        
                          
                              | 
                              | 
                              | 
                           
                          
                            | இலைகளை உண்ணும் புழுக்கள்  | 
                            விதைகளை உண்ணும் புழுக்கள்  | 
                             புழு துளை செய்தல் | 
                           
                          | 
                       
                      
                        பூச்சியின் விபரம்: 
                          
                            - முட்டைகள்: உருளை வடிவத்தில்,      பால் வெள்ளை நிறத்தில், தனித்தனியாக முட்டை இடும்.
 
                            - புழு: பச்சை நிறத்திலிருந்து      பழுப்பு நிறமாக தோற்றமளிக்கும். உடலின் மீது அடர் பழுப்பு சாம்பல் நிற வரிகளும்,      அடர் மற்றும் மங்கிய நிற வளையங்களும் காணப்படும்.
 
                            - கூட்டுப்புழு: பழுப்பு நிறத்தில்      மண், இலை, காய் பயிர் குப்பைகளில் காணப்படும்
 
                            - பூச்சி :பின் இறக்கைகள் இளம்      புகை வெள்ளை நிறத்துடன், அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்.
 
                            - இளம் பழுப்பு கலந்த      மஞ்சள் நிறத்தில், தடித்து காணப்படும். முன் இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறத்திலிருந்து      இளம் பழுப்பு நிறத்துடன், அடர் பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளி நடுவிலும் காணப்படும்.
 
                            | 
                         
                           | 
                       
                     
   | 
                 
                
                  கட்டுப்பாடு : 
                    
                      - ஊடு பயிராக பச்சைப்      பயிறு, உளுந்து, கடலை, சோயாபீன் பயிரிடலாம்.
 
                      - 3-4 வரிசைகள் மக்காச்சோளம்      (அ) சோளம் சூரியகாந்தி பயிரைச் சுற்றி விதைக்கலாம்
 
                      - பொறிப் பயிர்களாக துலக்கமல்லி      50 செடிகள் / ஏக்கர் என்ற அளவில் விதைக்கலாம்
 
                      - இனக்கவர்ச்சிப் பொறி      4 பொறிகள் / ஏக்கர் வைத்துக் கட்டுபடுத்தலாம்
 
                      - விளக்குப்பொறி (1 விளக்குப்      பொறி / 5 ஏக்கர்) என்ற அளவில் வைக்கலாம்
 
                      - இரை விழுங்கிகளான காக்சி      நெல்லி டிஸ், கிரைசோபெர்லா கார்னியா 1 புழு/தலை என்ற அளவில் வயலில் வெளியிடலாம்
 
                      - ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிராமா      (20,000/ஏக்கர்) பிரக்கான் வகைகள், கேம்போலெட்டிஸ் வகைகளை வயலில் வெளியிடலாம்.
 
                      - ஹெச். என். பி.வி      250 எல்.இ. + பிடி 0.5 கிலோ /ஹெக்டர் என்ற அளவில் தெளிக்கலாம்
 
                      - ஹெச். என். பி.வி      250 எல்.இ. + 1 கிலோ கரும்பு சர்க்கரை + 200 மி.லி. சேண்டோவிட் (அ) பீபால் கலந்து      மாலை வேளைகளில் மட்டும் தெளிக்கலாம்
 
                      - 5% வேப்ப எண்ணெய்       (அ) 5% வேப்பங்கொட்டை சாறு முட்டை இடுவதற்கு முன் தெளிக்கவும்
 
                      | 
                 
                
                | 
           
         
  |