அறிகுறிகள்:
                    
                      - நோயுற்ற கரணைகளை      நடுவதற்குப் பயன்படுத்தும்போது அவை முளைக்காமல் அழுகிவிடும்  அல்லது 6-12 அங்குலம் உயரம் வளர்ந்து பின் வாடி      விடும். 
 
                        - இந்நோய் பாதிக்கப்பட்ட      கரணை வளர்ந்தாலும்,      நாற்றுக்கள் வளர்ச்சி குன்றி மஞ்சள் நிறமாகக் காணப்படும். 
 
                        - சோகைகள் உதிர்ந்து      கரும்பு வாடி விடும். 
 
                        - பாதிக்கப்பட்ட கரணைகளை      நீளவாக்கில் பிளந்து பார்த்தால் உட்திசுக்கள் அழுகியும் செந்நிறமாக      மாறியிருப்பதையும் காணலாம். 
 
                        - கரணை காய்ந்தபின்      அது சிவப்பு நிறமாக மாறி அதனுள் பல கருப்பு நிற பூசண வித்துத் திரள்கள்      ஒட்டிக் கொண்டிருக்கும். 
 
                  - இக்கரணைகளைப் பிளந்து      நுகர்ந்து பார்த்தால் அன்னாசிப்பழ வாசனை வீசுவதால் அன்னாசிப்பழ நோய் எனவும்      அழைக்கப்படுகிறது. 
   | 
                
                
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                        | 
                        | 
                        | 
                     
                    
                      |   | 
                      சிவப்பு நிறம்மாறுதல் | 
                      வளர்ச்சி குன்றிய கரும்பு | 
                      மஞ்சளாதல்் மற்றும் வளர்ச்சி குன்றிய கரும்பு | 
                      கருமை நிற பூஞ்சாண | 
                        | 
                     
                    | 
                
                
                  நோய்க்காரணி:
                    
                      -                         இந்நோய் பரப்பும் பூஞ்சான் மண்ணில் 20 மாதங்கள் வரை வாழக்கூடியது.  இது கரணைப் பிளவுகளின் வழியே உட்சென்று திசுக்களை அழுகச் செய்து முளைப்புத் திறனைப் பாதிக்கின்றது.  இவ்வாறு கரணையினுள் இனப்பெருக்கமடையும் இது, மண்ணிற்குள் சென்று தங்கி, அடுத்த மறுதாம்புக் கரும்புப் பயிரையும் பாதிக்கின்றது.  மேலும் முற்றிய கரும்பின் அடிப்பாகத்திலிருந்து எடுக்கப்படும் கரணை 6-7 மாத வயதுடைய இளம் கரும்பின் மேல்பகுதியிலிருந்து எடுக்கப்படும் கரணையைவிட வீரியம் குறைந்ததாக இருக்கும்.  எனேவ முளைப்பதற்கு அதிக காலம் எடுப்பதோடு முற்றிய கரணைகள் எளிதில் அழுகல் நோய்க்கு உள்ளாகும்.                      
 
                   
                     | 
                  
                    
                      |   | 
                        | 
                       
                    
                      |   | 
                      செரட்ரோசைட்டிஸ் பாரடாக்ஸா | 
                       
                    | 
                
                
                  கட்டுப்படுத்தும் முறை: 
                    உழவியல் முறைகள்:  
                    
                      - இந்நோய்க்கு எதிர்ப்புத் தன்மை வாய்ந்த இரகங்களை பயிரிடவும். 
 
                      - நோயற்ற வயல்களிலிருந்து ஆரோக்கியமான விதைக்கரணைகளைத் தேர்வு செய்யவும். 
 
                      - சரியான வடிகால் வசதி      அமைத்து,      கரணைகளை 1-2 செ.மீ ஆழத்திற்கு      நடவேண்டும்.
 
                      - வயலில் கிருமி நாசினி பயன்படுத்துவதோடு, இராசாயண மருந்துகள் கொண்டு விதைநேர்த்தி செய்வதும் சிறந்தது.
 
                      - மழைக் காலங்களில் கரணைகளை ஆழமாக ஊன்றி நடுதல் கூடாது. 
 
                     
                    வேதியியல் முறைகள்:
                    
                    
                      - நடுவதற்கு முன் பூஞ்சாணக் கொல்லிக் கரைசலில் நனைத்துப் பின் நடுதல் அவசியம்.
 
                      - கரணைகளை நடுவதற்கு முன் கார்பென்டஸிம் 50 டபிள்யூ.பி 0.5 கி 1 லி நீரில் கலந்தது அல்லது பெவிஸ்டின் 1 சதவீதம் 1 லி நீரில் கலந்தது அல்லது கார்பன்டாசிம் 25 டி.எஸ் பூசணக்கொல்லி மருந்தை 2.5 கி.கி யூரியாவுடன் சேர்த்து 250 லி தண்ணீரில் கலந்து கரணைகளை 5 நிமிடம் நனைத்து நடுதல் வேண்டும். 
 
                      - அதேபோல் நடுவதற்கு      முன்பு கரணைகளை வெந்நீரில் நனைத்தும் எடுத்து நடுவதால் முளைப்புத்திறன்      அதிகப்படுத்துவதோடு வளரும் இளம் பயிர்கள் பூஞ்சாண உயிரிகளோடு போட்டியிட்டு      நன்கு வளர ஏதுவாகின்றது.
 
                      | 
                
                
                  Content validators:   
                  Dr. T. Ramasubramanian, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.  
Dr.V. Jayakumar, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.   
Dr.M. Ravi, Assistant Professor, Sugarcane Research Station, Sirugamani, Trichy- 639115.
  |