| பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            வாடல் நோய்:  ஃபுஸேரியம் சச்சாரி
                
                  அறிகுறிகள்:
                    
                      - கரும்பு 4-5 மாதங்கள் வளர்ச்சியடைந்த பின்பே இந்நோயின் தாக்குதலைக் காண முடியும்.
 
                      - நோய் தாக்கப்பட்ட கரும்பின் குருத்து இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின் முழுவதுமாகக் காய்ந்து விடும்.  கரும்பு சுருங்கி இலைகள் உதிர்ந்து விடும்.
 
                      - வெண்ணிற பஞ்சு போன்ற மைசீலியங்கள் இதன் சதைப்பகுதியில் தென்படும். 
 
                      - கரும்பைப் பிளந்து பார்த்தால், உட்பாகம் இளஞ்சிகப்பு அல்லது இளம் ஊதாநிறத்தில் இருக்கும்.  கணுவிடைப் பகுதி உட்பாகம் குழிவடைந்து படகு வடிவில் இருக்கும். 
 
                      - இந்நோய் தாக்கிய கரும்பிலிருந்து ஒரு வித துர்நாற்றம் வெளிவரும். 
 
                    | 
                 
                
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                        | 
                        | 
                        | 
                     
                    
                      |   | 
                      சிவப்பு நிறம்மாறுதல் | 
                      இலை மஞ்சளாதல் | 
                      கரும்பில் சுருக்கம்  | 
                      இடைகன்றில் படகு வடிவ  துவாரங்கள்   | 
                        | 
                     
                    | 
                 
                
                  நோய்க்காரணி:
                    
                      -                         கொனிடியோஸ்போர்கள் பொதுவாக செங்குத்தாகவும் கிளைத்தும் காணப்படும்.  பெரும் கொனிடியாக்கள் அதிகளவில் நேரடியாகவும், 3-5 தடுப்புக்களைப் பெற்றிருக்கும்.  இதன் தனித்த அடிச்செல் 27-73 × 3.4-5.2 மி.மீ அளவு கொண்டவை.  பிளாஸ்டோகொனீடியா நேராகவோ, சிறிது வளைந்தோ, 2-3 தடுப்புகளையும், பிறை அல்லது ஈட்டி வடிவமும் கொண்டிருக்கும்.  மேலும் ஒரளவு கூராகவும், பெரும்பாலும் சமச்சீரற்ற தனித்த எப்பிகல்  செல் கொண்டும் அடித்தண்டு   செல் 16-43 × 3.0-4.5 மி.மீ அளவு கொண்டதாகவும் இருக்கும்.                      
 
                    | 
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                        | 
                       
                    
                      |   | 
                      ஃபுஸேரியம் சச்சாரி | 
                        | 
                      கொனிடியோஸ்போர்கள | 
                       
                    | 
                 
                
                  கட்டுப்படுத்தும் முறை:                     
                    உழவியல் முறைகள்: 
                    
                      - நோயற்ற ஆரோக்கியமான      விதைக் கரணைகளைப் பயன்படுத்துதல், கோ 617,      பி.ப்பி 17 போன்ற      எதிர்ப்பு இரகங்களை      வளர்க்கவும். 
 
                        - பயிர் சுழற்சியை      மேற்கொள்ளுதல்,      வேர்த்துளைப்பானைக் கட்டுப்படுத்துதல், நீண்ட      வறட்சி அல்லது நீர்த்தேக்கப் பிரச்சினை ஏற்படாமல் வயலைப் பராமரித்தல். 
 
                        - பூஞ்சாணக்      கொல்லிகளுடன் விதை நேர்த்தி செய்தல்.
 
                     
வேதியியல் முறைகள்:
                    
                      - பெவிஸ்டின் 0.1% கரைசலுடன் விதை நேர்த்தி செய்யவும்.
 
                      - 2 கி/லி நீரில் கார்பன்டஸிம் கலந்து கரும்பின் வேர் மண்டலப் பகுதிகளில் 15 நாட்கள் இடைவெளியில் ஊற்றவும்.
 
                      - 40 பி.பி.எம்      போரான் அல்லது மாங்கனீசு கரைசலில் விதைக் கரணைகளை நனைத்துப் பின் நடுதல்.       அல்லது நுண்ணுாட்டச் சத்துக்கரைசலை தெளிப்பதன் மூலமும் ஓரளவு குறைக்கலாம். 
 
                    | 
                 
                
                  Content validators:   
                  Dr. T. Ramasubramanian, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.  
Dr.V. Jayakumar, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.   
Dr.M. Ravi, Assistant Professor, Sugarcane Research Station, Sirugamani, Trichy- 639115.  
Source of conidiophore:www.doctorfungus.org/thefungi/Fusarium_oxysporum.htm
  | 
                 
                | 
           
       
  |