| பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் நோய்கள்  | 
             
           
         
       
        
          
            துரு நோய்: பக்ஸீனியா இரியான்த்தி 
            
              
                
                  அறிகுறிகள்:
                    
                      - கரும்பில் துரு நோய் இலைகளைத் தாக்கும் முக்கிய நோய் 
 
                      - இலையின் இருபுறங்களிலும் மஞ்சள் அல்லது பழுப்பு நிற சிறிய கொப்புளங்கள் போன்ற புள்ளிகள் காணப்படும். 
 
                      - இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிதாகும்போது சோகைகளில் ஆரஞ்சு பழுப்பு அல்லது செம்பழுப்பு நிறத்தில் தோன்றும். 
 
                      - இந்நோயினை தோற்றுவிக்கும் வித்துகள் இலையின் அடிப்பக்கம் தங்கி இருந்து உற்பத்தியாகும். 
 
                      - இளம் இலைகள் காய்ந்து உதிர்ந்து விடும். 
 
                    | 
                 
                
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                        | 
                        | 
                        | 
                     
                    
                      |   | 
                      மஞ்சள் புள்ளிகள் | 
                        | 
                      சிவப்பு பழுப்பு புள்ளிகள் | 
                        | 
                      துரு போன்று  
                        தோற்றம் | 
                     
                    | 
                 
                
                  நோய்க்காரணி:
                    
                      - யுரிடினியா நீண்டு, செம்பழுப்பு நிறம் கொண்டிருக்கும்.  இதன் பாராபைசஸ் வெளிர் பழுப்பு நிறம் முதல் நிறமற்றதாகவும், தலை வடிவிலும் (கேப்பிடேட்) இருக்கும். 
 
                      - யுரினியோவித்துகள் தடித்த சுவர் கொண்டு, ஆரஞ்சுப் பழுப்பு நிறத்தில் 26-34 x 16-20 மைக்ரான் மீ அளவுடையவை.  யுரிடினியோ வித்துக்களின் மேற்பகுதி 4-5 மத்திய ரேகைத் துளைகளுடன் எக்கினுலேட் ஆகும். 
 
                      - டீலியோஸ்போர்கள் (வித்துகள்) அடர் பழுப்பு நிறமும் 30-43 x 17-23 மைக்ரான் மீ அளவும், செப்டத்தில் சுருங்கியும்,  இரு செல்லுடனும் அமைந்துள்ளன. 
 
                      | 
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                        | 
                       
                    
                      |   | 
                      பக்ஸீனியா இரியான்த்தி | 
                        | 
                      டீலியோஸ்போர்கள | 
                       
                    | 
                 
                
                  கட்டுப்படுத்தும் முறை: 
                    உழவியல் முறைகள்:  
                    
                      - பாதிக்கப்பட்ட இலைகளை உடனே அகற்றி எறித்துவிட வேண்டும். 
 
                      - ஆலைகளின் கழிவுகளை வயல்களில் இடும்போது, இந்நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது.எனவே அவற்றை பயன்படுத்தகூடாது
 
                      - இந்நோயை கட்டுப்படுத்த ஒரே வழி துரு நோய் எதிர்ப்பு இரகங்களை பயிரிடலாம்.
 
                      - கோ 91010 (தனுஷ்), கோ 87025 (கல்யாணி) போன்ற எதிர்ப்பு இரகங்கள் பயிரிடலாம்.
 
                     
                    வேதியியல் முறைகள்: 
                    
                      - டிரைடிமார்ப் 1 லி அல்லது மேன்கோஷெப் 2.0 கி.கி/ஹெக்டர் என்ற அளவு தெளிக்கலாம்.
 
                      -  டயத்தேன் எம் 45 2 கி/லி மருந்தினை ஒரு முறை தெளிக்கவும்.
 
                      - டிரையஸோல் அல்லது ஸ்டிரோபிலியூரின் அல்லது பைரகுளோஸ்டிரோபின் பூஞ்சானக் கரைசலை 1 லி நீரில் 3 கி என்ற அளவில் தெளிக்கவும்.
 
                    | 
                 
                
                  Content validators:   
                  Dr. T. Ramasubramanian, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.  
Dr.V. Jayakumar, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.   
Dr.M. Ravi, Assistant Professor, Sugarcane Research Station, Sirugamani, Trichy- 639115. 
  | 
                 
                | 
           
       
  |