அறிகுறிகள்:
                    
                      - 5-லிருந்து 6 மாத கால வயதுடைய பயிரினை இந்நோய் அதிகம் தாக்குகின்றது. குறிப்பாக  கணுவிடைப் பகுதிகள் சுருங்கி வளர்ச்சி குன்றும். 
 
                      - இலைகளின் நடுநரம்பு மஞ்சள் நிறமாக மாறி அதனை ஒட்டி உள்ள பகுதியிலும் பரவிக் காணப்படும்
 
                      - சில சமயங்களில் நடுநரம்பு சிவப்பு நிறமாக மாறி காணப்படும்
 
                      - இதனைத் தெடர்ந்து 3 முதல் 5 இலைகள் பழுப்படைந்து ். 
 
                      - சில சமயம், நோய்த் தாக்குதல் அதிகமான நிலையில் கரும்பின் உச்சியில் முடிக்கொத்து போல் காட்சியளிக்கும். 
 
                      - முதிர்ந்த கரும்புகளில்தான் இந்நோய் அதிகம் பரவும். துாரத்திலிருந்து பார்க்கும்போதே இந்நோயினை காணலாம். 
 
                    | 
                
                
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                        | 
                        | 
                        | 
                     
                    
                      |   | 
                      இலை மஞ்சளாதல் | 
                        | 
                      நடுநரம்பு மஞ்சளாதல் | 
                        | 
                      காய்ந்த இலைகள் | 
                     
                    | 
                
                
                  நோய்க்காரணி: 
                    
                      - இந்நோய் தாக்கும்      வைரஸ் மெலனாபிஸ் சச்சாரி, ரோபலோசிபம் மெய்டிஸ் எனும்      அசுவினிகளால் பரவுகிறது. 
 
                      - (SCYLV) எஸ்.சி.ஒய்.எல்.வி என்பது ஸியூட்டேவிரிடே      குடும்பத்தைச் சார்ந்தது.  இவ்வைரஸ் பயிரின் போலியம்      செல்களுக்குள் வாழ்கின்றது. 
 
                     
   | 
                  
                    
                      |   | 
                        | 
                        | 
                        | 
                       
                    
                      |   | 
                      மெலனாபிஸ் சச்சாரி | 
                        | 
                      ரோபலோசிபம் மெய்டிஸ | 
                       
                    | 
                
                
                  கட்டுப்படுத்தும் முறை: 
                  உழவியல் முறைகள்:  
                  
                    - நாற்றங்கால் அமைத்துப் பின் நாற்றுக் கரணைகளை வயலில் நடுவதன் மூலம் இந்நோய் தாக்குதலைத் தவிர்க்கலாம். 
 
                    - திசு வளர்ப்பு முறையில் வளர் திசுக்களிலிருந்து பெறப்படும் நாற்றுகளை நடுவது சிறந்தது.
 
                    - ஆரோக்கியமான விதைக்காரணிகளைப் பயன்படுத்தவும். 
 
                    - வயல்களை சுத்தமாக பராமரித்தல் வேண்டும். 
 
                    - சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்குமாறு தேவையான நீர் மற்றும் உர நிர்வாகம் செய்தால் இந்நோயினைப் பெருமளவு குறைக்கலாம். 
 
                   
                  வேதியியல் முறை 
                  
                    - கார்போஃபியூரான் 2 கி.கி அல்லது போரேட் 6 கி.கி/ஹெ என்ற அளவில் மண்ணில் இடவும். 
 
                    - மாலத்தியான் 1.5 கி.கி/ஹெ மருந்தினை செப்டம்பர் மற்றும் அக்டோபரில் சோகை உரித்தப்பின் இருமுறை தெளிக்கவும்.
 
                    - மாலத்தியான் (0.1%) அல்லது டெமக்ரான் (0.2%) தெளிப்பதன் மூலமும்      இந்நோய் மேலும் பரவுவதைத் தடுக்கலாம். 
 
                    | 
                
                
                  Content validators:   
                  Dr. T. Ramasubramanian, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.  
Dr.V. Jayakumar, Senior Scientist, Sugarcane Breeding Institute, Coimbatore-641007.   
Dr.M. Ravi, Assistant Professor, Sugarcane Research Station, Sirugamani, Trichy- 639115.  
Source  of Rhopalosiphum maidis: http://entoweb.okstate.edu/ddd/insects/cornleafaphid.html |