செதில் பூச்சி: மெலாஸ்பிஸ் குளோமமெர்ட்டா  | 
                
                
                  தாக்குதலின் அறிகுறிகள்:   
                    
                      - இடைகணுப்பகுதியை      விட கணுப்பகுதிகளில் தாக்குதல் அதிக அளவில் இருக்கும்
 
                       
                     
                    பூச்சியின் விபரம்:   
                    
                      - குஞ்சுகள்: பெண் பூச்சிகள் குட்டி போடும் இனப்பெருக்கம் செய்கின்றன. பெண்      பூச்சியின் வயிற்றுக்குள்ளேயே குஞ்சுகள் பொரித்து வெளிவருகின்றன (முட்டையிலிருந்து).      இவை பெண் பூச்சியின் புறப் பாலுறுப்புகள் மூலம் வெளிவருகின்றன. இவை தவழும் பூச்சிகள்      எனப்படும். இவை சாறினை உறிஞ்ச சரியான இடத்தினைத் தேர்வு செய்தபின் அங்கேயே ஒட்டிக்கொள்கின்றன.
 
                      - முதிர்ந்த பூச்சிகள்: சாம்பல்      கலந்த கருப்பு அல்லது பழுப்பு நிற வட்ட வடிவச் செதில்கள் அடைஅடையாக கணுப்பகுதிக்கு      அருகில் ஒட்டியிருக்கும்
 
                       
                     
                   | 
                  
                        | 
                
                
                  கட்டுப்பாடு:  
                    
                      - செதில்      பூச்சி தாக்காத விதைக்கரணைகளை தெரிவு செய்து நட வேண்டும்.
 
                      - வயல்களையும்,      வரப்புகளையும், களை இல்லாமல் அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 
                      - தொடர்ந்து வயலில் உள்ள கருணைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
 
                      - 150-210      வது நாட்களில் சோகை உரித்தல் அவசியம் 
 
                      - வயலில்      அளவுக்கு அதிகமான தண்ணீர் தேங்குதலைத் தவிர்க்க வேண்டும்
 
                      - 1      லி நீரில் 1 கி மாலத்தியான் கலந்த கரைசலில் விதைக் கரணைகளை 30 நிமிடம் நனைத்துப்      பின் நடவும்.
 
                      - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும் (120/150      வது நாளில் சோகை உரித்தற்க்கு பிறகு)
                        
                            - டைமீத்யோட் 30 EC @2 மிலி/லி
 
                          - மீத்தைல்டேம்மட்டான் 25 EC @2 மிலி/லி 
 
                         
                       
                    |