தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - இளம்      புழுக்கள் இலையின் நடுப்பகுதியைத் துளைத்து உட்சென்று குருத்தை அடைகின்றது
 
                      - தாக்கப்பட்ட      இலைகளின் நடுப்பகுதியில் சிறு சிறு துவாரங்கள் காணப்படும்
 
                      - புழுக்கள்      குருத்துக்களை தாக்கி அழிப்பதால் நடுக்குருத்து காய்ந்துவிடும்
 
                      - நுனிக்குருத்தில்      பூச்சியினால் துளைக்கப்பட்ட துளைகள் காணப்படுவதோடு, கரும்பின் நுனியில் கிளைப்புகள்      தோன்றி பார்ப்பதற்கு முடிக்கொத்துப் போல் தோன்றும்
 
                     
                    பூச்சியின் விபரம்: 
                    
                      - முட்டை: மேல் சோகையின்      அடிப்புறம் நடுநரம்பின் அருகில் முட்டைகள் இடப்பட்டிருக்கும் . இம்முட்டைக் கூட்டங்கள்      ரோமங்களால் சூழப்பட்டிருக்கும். 10-80 முட்டைகள் வரை ஒரே கூட்டமாகக் காணப்படும்.
 
                      - இளம்புழு: வெள்ளை நிற மென்மையான      உடலில் சிகப்பு நிற கோடு நடுவே காணப்படும். இதன் தலை மஞ்சள் நிறமாக இருக்கும்.      கூடானது புழு வெளியேறக்கூடிய ஒரு பக்க துளையுடன் கட்டப்பட்டிருக்கும். கூட்டுப்புழுப்      பருவம் 6-21 நாட்கள்.
 
                      - பூச்சி: வெள்ளை நிறமாகவும்,      வயிற்றுப்பகுதிக்கு கீழ் ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற ரோமங்கள் பெண் பூச்சியில் கொத்தாக      காணப்படும்
 
                     
கட்டுப்பாடு: 
                    
                      - கூட்டுப்புழு      ஒட்டுண்ணியான கேம்பிராய்டஸ் (ஐசோதிமா) ஜாவென்சிஸை 100 ஜோடிகள்/ஹெ என்ற அளவில்      வயலில் விடலாம்.
 
                      - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்: 
                        
                        
                          - கார்போபியுரான் 3% G 33.3 கி.கி/ஹெக்டர்
 
                          - குளோரோடேரேநிலிபுருள் 18.5% SC 375 மி.லி/ஹெக்டர்
 
                          - போரேட் 10 % G 30 கி.கி/ஹெக்டர்
 
                         
                       
                     
                   | 
                  
                    
                      
                          | 
                          | 
                       
                      
                        இலைகளின் நடுப்பகுதியில் சிறு சிறு துவாரங்கள்   | 
                        நடுக்குருத்து காய்தல  | 
                       
                    
                   
                     
                    
                     |