பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இடைக்கணுத் துளைப்பான்: கைலோ செக்காரிபேகஸ் இண்டிகஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் இரண்டு கணுக்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நுழைந்து சென்று திசுப்பகுதியைத் தின்று அழிக்கும்.
  • தாக்கப்பட்ட கணுவிடைப்பகுதி சிறியதாகச் சுருங்கிப் காணப்படும். முதல் ஐந்து கணுவிடைப்பகுதிகளை மட்டுமே அதிகம் தாக்குகின்றது.
  • அதில் பல துளைகளும், துளைகளின் அருகில் புழுவின் எச்சம் காணப்படும்
  • சேதம் அதிகமாகும் போது கரும்பு வலுவிழந்து முறிந்து விடும்
  • தாக்கப்பட்ட தண்டுகளின் திசுப்பகுதிகள் இளஞ்சிகப்பு நிறத்திலிருக்கும்
துளைகள் அரக்கு நடுக்குருத்து காய்தல வலுவிழந்த இடைக் கணுக்கள்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இலைப் பரப்பின் நடுநரம்பிலிருந்து கரும்புத் தண்டில் அருகில் அல்லது 9-11 முட்டைகள் பகுதி பகுதியாக இடப்பட்டிருக்கும். முட்டைகள் தட்டையாக நீள் வட்ட வடிவில், மெழுகு போன்று பளப்பளப்புடன் வெண்மை நிறத்தில் இருக்கும்.
  • இளம்புழு: வெள்ளை நிற உடலும் பழுப்பு நிற தலையும் கொண்ட இளம்புழுவில் நான்கு ஊதா நிறக்கோடுகள் காணப்படும்
  • கூட்டுப்புழு: பாதி உலர்ந்த நிலையில் சோகையின் பரப்பில் கூடுகட்டி இருக்கும். கூட்டுப்புழு நிலை 7-10 நாட்கள் வரை இருக்கும்
  • முதிர்ந்த பூச்சி: முன் இறக்கைகள் இரண்டும் வைக்கோல் நிறத்தில் இருக்கும். அவற்றில் சிறு புள்ளிகள் நடுவில் காணப்படும்

கட்டுப்பாடு: 

  • முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோகிரைமா கைலோனிஸ் அட்டையை நட்ட 4 மாதத்திலிருந்து இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 6 முறைக் கட்ட வேண்டும்
  • மழைக்காலத்தில் எரும்பு காணப்படுவதால் ஒட்டுண்ணியை கொசு வலை போட்ட பாலீத்தீன் கப்பில் வைத்து வயலில் விடவும்
  • நட்ட 150 மற்றும் 210 நாட்கள் கழித்து தோகை உரித்தல் வேண்டும்
புழு
பூச்சி
ட்ரைக்கோகிரைமா கைலோனிஸ்

 

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015