பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வேர் புழு: கோலோட்ரைக்கியா செராட்டா

தாக்குதலின் அறிகுறிகள்

  • வேர் மற்றும், அடிக்குருத்து பகுதியில் பெரும் சேதம் விளைவிக்கும்
  • பாதிக்கப்பட்ட கரும்புகள் வேரற்று கீழே சாய்ந்து விடும்
  • முதல் பயிரை விட, மறு தாம்புப் பயிரில் இப்பூச்சித் தாக்குதல் அதிகம் காணப்படுகின்றது
  • இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகுபோன்று மாறிவிடும்
  • உச்சிப் (குருத்து) பகுதி முழுதும் காய்ந்து விடும்
  • பாதிக்கப்பட்ட கரும்பினை இழுத்தால், எளிதில் வெளிவந்து விடும்
 

பூச்சியின் விபரம்:
கோலோட்ரைக்கா செராட்டா, கோலோட்ரைக்கா கான்சியேனா:

  • முட்டைகள்: இதன் முட்டைகள் உருண்டை வடிவில் வெண்மையாக காணப்படும்
  • புழு: சதைப்பற்றுடன் ஆங்கில ‘சி’ (C) எழுத்து வடிவில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் காணப்படும்
  • வண்டு: சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்.

லேக்கோபோயஸ் லேபிடோபோரா:

  • புழு: சதைப்பற்றுடன் வெள்ளை நிறத்தில் காணப்படும்
  • வண்டு: சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும்

கட்டுப்பாடு:

  • பயிர்ச்சுழற்சி முறையை கையாள வேண்டும்
  • கோடை காலங்களில் அறுவடை முடிந்த உடன் ஒரு ஆழமான உழவு செய்ய வேண்டும்.ஜூன் மாததில் 4-5 முறை உழுவதன் மூலம் மண்ணில் உள்ள புழுக்கள் வெளியே வரும் இதனால் பறவைகள் அதை கொத்தி திங்கும்.
  • தொடர்ந்து வயலில் உள்ள கருணைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • வயலில் எப்பொழுதும் ஈரத்தன்மை இருக்குமாறு வைத்திறுக்க வேண்டும் இதனால் புழுக்கள் மண்ணை விட்டு வெளியே வந்துவிடும்
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015