பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

கரையான்: ஓடனோடெர்மஸ் ஓபிசஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • வளரும் கரும்பின் சோகையின் ஓரங்களில் அரை வட்டமாக கரையான் கடித்தது போல் தென்படும்
  • நடவு செய்த கரணைகள் சரியாக முளைக்காமல் இருக்கும்
  • முதலில் வெளிப்புற இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து போதல் பின்பு உட்புற இலைகளும் காய்தல்
  • இறுதியில் முழுக்குருத்தும் காய்ந்து இழுக்கும்போது கையோடு வந்து விடுதல்
  • விதைக் கரணைகள் உட்புறத் திசுக்களின்றி கரையான் மண் காணப்படுதல், கரும்பு முழுவதும் காய்ந்து போதல் போன்றவை கரையான் தாக்குதலின் அறிகுறிகளாகும்

பூச்சியின் விபரம்

  •  பழுப்பு கலந்த வெண்ணிற எறும்பு போன்ற சிறு பூச்சிகள், தலை அடர் நிறத்தில் காணப்படும்

கட்டுப்பாடு:

  • வயல் மற்றும் வரப்புகள் நிரம்ப தண்ணீர் கட்டுவதன் மூலம் கரையான தாக்குதலைத் தவிர்க்கலாம்
  • விதைக்கரணையை நடுவதற்கு முன்பு இமிடோகுளோர்பிட் 70 WS 0.1 சதம் அல்லது குளோர்பைரிபாஸ் 20EC 0.04 சதம் மருந்தினுள் நனைத்து எடுக்க வேண்டும்.
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்:
    • குளோரோடேரேநிலிபுருள்18.5 % SC 500-600 மி.லி/ஹெக்டர்
    • இமிடாகுளோபிரிட் 17.8% SC 350 மி.லி/ஹெக்டர்
    • குளோரோனபரிபாஸ்  20% EC 705 மி.லி/ஹெக்டர்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015