பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

குருத்துத் துளைப்பான்: கைலோ இன்ஃபஸ்கேட்டலஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் தோகை சேரும் இடத்தில் உள்ள இளந்தண்டுகளை துளைத்து உள்ளே சென்று திண்பதால் நடுக்குருத்து காய்ந்து விடும். இதனை இழுத்தால் எளிதில் வந்துவிடும்
  • 1-3 மாத வயதுடைய பயிர்களை இப்பூச்சி அதிகமாகத் தாக்கும்
  • நிலமட்டத்திற்கு மேலே பல சிறு துளைகள் குருத்தில் காணப்படும்
  • காய்ந்த குருத்திலிருந்து துர்நாற்றம் வீசும்

பூச்சியின் விபரம்: 

  • முட்டை: அளவுகோல் போன்று முட்டைகள் 3-5 வரிசைகளாக 4-100 முட்டைகள் கூட்டமாகக் சோகையின் அடிப்புறத்தில் காணப்படும். இக்கூட்டங்கள் டைல்ஸ்கள் போன்று ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருக்கும். இது 4-6 நாட்களில் பொரித்து புழுக்கள் வெளிவரும்.
  • இளம்புழு: இது பழுப்பு கலந்த வெண்மை நிறத்தில் 5 ஊதா நிறக் கோடுகளுடன் காணப்படும். தலை அடர் பழுப்பு நிறத்துடனும் 16-30 நாட்கள் வாழ் நாட்களும் கொண்டது.
  • கூட்டுப்புழு: கூட்டுக்குள் செல்லு முன் புழுவானது பயிரின் தண்டில் ஒரு பெரிய துளையிட்டு அதனை பட்டு நுால் கொண்டு மூடிவிடும். பின் நீண்ட கூட்டுக்குள் அடைந்திருக்கும்.
  • பூச்சி: வெளிர் சாம்பல் பழுப்பு நிற பூச்சியில் கருப்பு நிற புள்ளிகள் முன் இறக்கைகளில் காணப்படும். பின் இறக்கைகள் வெண்ணிறத்தில் இருக்கும்.
துளைகள்
நடுக்குருத்து காய்தல
முட்டை புழு கூட்டுப்புழு பூச்சி

கட்டுப்பாடு:
பொருளாதார சேத நிலை: 15% "குருத்து காய்தல்" 

  • சாகுபடிப் பருவத்தில் டிசம்பர் – ஜனவரி முன்பட்டத்தில் பயிர் செய்வது சிறந்தது.
  • நடவு செய்த 45 நாட்கள் கழித்து மண் அணைக்க வேண்டும்.
  • தக்கைப்பூண்டினை ஊடு பயிராகப் பயிரிடுவது நல்ல பலனளிக்கும்.
  • 1.5 x 1012 POB/ha  கிரானுலோசிஸ் வைரஸ்களை ஒரு ஹெக்டரில் நடவு செய்த 35 வது மற்றும் 50 வது நாளில் விட வேண்டும். டாக்னிட் ஒட்டுண்ணியான ஸ்டர்மியோப்சிஸ் இன்பெரன்ஸ்ன் கிராவிட் பெண் பூச்சிகள் 125 னை ஒரு ஏக்கர் வயலுனுள் விடலாம்.
  • மண்ணில் இடுதல்
    •  கார்போஃபியூரான் 3 CG 33 கி.கி
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
    • குளோரோடேரேநிலிபுருள் 18.5% SC 375மி.லி/ஹெக்டர்
    • பைப்ரினில் 5% SC 1500-2000 மி.லி/ஹெக்டர்
    • பைப்ரினில் 0.3% GR 25-33.3 கி.கி/ஹெக்டர்
    • குயின்லபாஸ் 25% EC 2000 மி.லி/ஹெக்டர்
    • வேப்பங் கொட்டைச் சாறு (NSKE) 5% 25 கி.கி/ஹெக்டர்
குறிப்பு: கிரானுலோசிஸ் வைரஸ்யை ஒட்டும் திரவத்துடன்( 0.05 %) கலந்து மாலை நேரத்தில் கரும்பு வயலில் தெளிக்க வேண்டும் மற்றும் தெளித்தவுடன் வயலுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.கிரானுலோசிஸ் வைரஸ் பாதிப்புக்குள்ளான 750 புழுவை எடுத்து நன்றாக அரைத்து சுத்தம் செய்து அந்த கலவையை எடுத்து 500 லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். இந்த கிரானுலோசிஸ் வைரஸ் நன்மை செய்யும் பூச்சிகளுக்கு பாதுக்கபானாது. வரவு செலவு கணக்கு பார்க்கும் போது வேப்பஸ் கொட்டைச் சாறு (NSKE 5%) தெளிப்பது சிறந்தாகும். 1.5 * 10¹² POB/ha என்ற அளவில் கிரானுலோசிஸ் வைரஸ்யை நடவு செய்த 35 வது மற்றும் 50வது நாளில் வயலில் தெளிக்க வேண்டும் மற்றும் டாக்னிட் ஏட்டுண்ணியான ஸ்டா்மியோப்சிஸ் இன்பெரன்ஸ் பெண் பூச்சிகள் 125/ ஹெக்டர் என்ற அளவில் நடவு செய்த 35 வது மற்றும் 50 வது நாளில் விட வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015