செர்கோஸ்போரா       இலைக்கருகல்: செர்கோஸ்போரா கிகுச்சி 
              
                
                  அறிகுறிகள் 
                    
                      - பாதிக்கப்பட்ட       இலைகள் காய்ந்தும், அடர்ந்த, சிவப்பு கலந்து பழுப்பு நிறத்திலும் காணப்படுகிறது.
 
                      - தீவிரமாக  பாதிக்கப்பட்ட வெளிர் நிறத்திலும், இறந்த திசுக்களைக்கொண்டும்,       இறுதியில் உதிர்ந்த விடுகின்றன.
 
                      - இலைகளின்       காம்புகளில் சிவப்பு நிறமாற்றம் தோன்றி உதிர்ந்து விடுகின்றன.
 
                      - பின்னர்       இளம், மேல் இலைகள் காய்ந்து, இறுதியில் வயல் முழுவதும் காய்ந்து போன தோற்றம்       காணப்படுகின்றன.
 
                     
                    கட்டுப்பாடு
                    
                      - நல்ல,       தரமான விதையை உபயோகிக்கவேண்டும்.
 
                      - பாதிக்கப்பட்ட       செடிகளை அழிக்கவேண்டும்.
 
                      - விதையை       ஸ்ரெப்டோசைக்கிளின் 250 பிபிஎம் (2.5 கிராம் / 10 கிலோ விதை) என்ற அளவில் நேர்த்தி       செய்யவேண்டும்.
 
                  - காப்பர்       பூசணக்கொல்லி 2 கிராம் / லிட்டர் அதனுடன் ஸ்ரெப்டோசைக்கிளின் 250 பிபிஎம் தெளிக்கவேண்டும்.
 
                  - முந்தியப்  பயிரின் கழிவுகளை அகற்றவேண்டும்.
 
                  - விதையை  திரம் + கார்பன்டாசிம் (2:1) 3 கிராம் / கிலோ என்ற அளவில் விதைநேர்த்தி செய்யலாம்.
 
                  - மேங்கோசெப்  அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம் / லிட்டர் அல்லது கார்பன்டாசிம் 1 கிராம்  / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தவும்.
 
                    | 
                   | 
                 
              |