| பயிர் பாதுகாப்பு  :: சோயாபீன் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            
              
                | தண்டு  ஈ: மெலனோகுரோமைசா சோஜாயி | 
               
              
                
                  
                    தாக்குதலின் அறிகுறிகள்
                      
                      
                        - முட்டையிலிருந்து வெளிவரும் இளம் புழு  தண்டினை வளைத்து சென்று உண்டு சேதப்படுத்தும்.
 
                        - தாக்கப்பட்ட தண்டுகளில் இளம்சிவப்பு  நெலிந்தக் கோடுகளும், கூட்டுப்புழுவும் காணப்படும்.
 
                        - சேதம் அதிகமாகும் நிலையில் புழு நுனி  வேர்வரை சென்று சேதப்படுத்தும்.
 
                        - தாக்கப்பட்ட செடிகள் மடிந்துவிடும்.
 
                       
                      பூச்சியின் விபரம் 
                      
                        - புழு - வெள்ளை நிறமாக இருக்கும்.
 
                        - ஈ - சிறியதாக, கருமை நிறமுடையது.
 
                        | 
                      | 
                   
                  | 
               
              
                கட்டுப்பாடு 
                  
                    - கோடைக்காலத்தில் நிலத்தை ஆழமாக உழ வேண்டும்.
 
                    - பரிந்துரை செய்யப்பட்ட விதை அளவை பயன்படுத்த  வேண்டும்.
 
                    - ஊடுபயிராக சோளம் மற்றும் மக்காச்சோளம்  ஆகிய பயிர்களை பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 
                    - பயிர்சுழற்சி முறையை கையாள வேண்டும்.
 
                    - தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத்  தவிர்க்க வேண்டும்.
 
                    - தாக்கப்பட்ட பகுதிகளையும், முட்டைக்குவியலையும்  சேகரித்து அழிக்க வேண்டும்.
 
                    - போரேட் 10 கிலோ அல்லது கார்போப்யூரான்  30 கிலோ தூளை விதைப்பின் போது தூவ வேண்டும்.
 
                    - குயினால்பாஸ்  (அ) ட்ரைசோபாஸ் 12 மிலி மருந்தை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்துத் தெளிக்கவும்.
 
                    | 
               
               
          
 | 
           
         
  |