| பயிர் பாதுகாப்பு :: சோளம் பயிரைத் தாக்கும் நோய்கள் | 
             
           
         
       
        
          
            கதிர்ப்பூசணநோய்: பலவகை பூசணங்களின் சேர்க்கை 
               
              
                - இந்நோய் தமிழகத்தில் சோளம் பயிரிடப்படும் பகுதிகளில் மழைக்காலத்தில்      பொதுவாகக் காணப்படும்.
 
                  - ஆஸ்பெரிஜில்லஸ் நைஜர், ஆஸ்பெரிஜில்லஸ் ஒரைசே, கர்வுலேரியா      லுனேட்டா, ஹெல்மிந்தோஸ்போரியம், டெட்ராமீரா, ரைசோபல் நைக்ரிகன்ஸ், புசேரியம் மொனிலிபார்மே மற்றும் ஆல்டெர்நேரியா போன்ற பூசணங்களால் இந்நோய்      ஏற்படுகின்றது.
 
               
              அறிகுறிகள்
               
              
                - கதிர் பறித்தவுடன் இந்நோய் தோன்ற ஆரம்பித்து நாளடைவில் கதிர்      முழுவதும் பரவுகின்றது.
 
                  - கதிர்களில் பல்வேறு நிறங்களில் பூசண வளர்ச்சி ஏற்பட்டு கதிர்கள்      வீணாகின்றன.
 
                  - இந்நோய் கதிர் பறித்தவுடனும் கதிரில் பால் பிடிக்கும் தருணத்திலும்      தோன்றினால் அதிகமான இழப்பினை ஏற்படுத்துகின்றது.
 
                  - தானியம் முதிர்ச்சியடைந்தபின் இந்நோய் தோன்றினால் தானியங்கள்      அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. இந்நோயினால் தானியங்கள் கெட்டுவிடுதல், முளைக்கும்      திறன் குறைதல், தானியத்தின் தரம் குறைதல் போன்ற  விளைவுகள் ஏற்படுகின்றன.
 
                  - அத்துடன் அப்ளாபாக்சின் என்ற நச்சுப் பொருள் இந்நோயினால்      தோன்றுவதால் அவ்வாறான தானியங்களை உட்கொள்ளுவதால் மனித இனத்திற்கும், விலங்கினத்திற்கும்      கேடு விளைவும் வாய்ப்புண்டு.
 
               
               | 
           
          
            கட்டுப்பாடு
              
                - இந்நோய் கோ 21, கோ 22 ஆகியவைகளில் குறைவாகத்  தோன்றுகின்றது. 
 
                  - நோய் தாக்கிய கதிர்களிலிருந்து பெற்று விதைகளை விதைக்கப்      பயன்படுத்தக்கூடாது.
 
                  - இதன் மூலம் விதைப்புத்திறன் குறைவதைத் தவிர்க்கலாம்.
 
                  - விதை முளைப்புத் திறன் குறைவதைத் தடுப்பதற்காக      விதைக்கும்முன், திரம் 2 கிராம்/கிலோ      வீதம் கலந்து இடவும்.
 
                  - அடிக்கடி மழை தூறிவரும்  குளிர் காலத்தில் கதிரி பிரியும      பொழுதும் முதல் தெளிப்பிற்கு ஒரு வாரத்திற்குப் பின்பும் பால் பிடிக்கும் தருணத்திலும்      மேன்கோசெப் 1 கிலோ / எக்டர் அல்லது கேப்டான் 1 கிலோ + ஆரியோப்பஞ்சின் - சால்       100 கிராம் / எக்டர் வீதம் தெளிப்பதால் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
 
                  - விதைகளைச் சேமித்து வைப்பதற்கு முன் அதிகமாக ஈரம் இல்லாமல்      நன்கு காய வைத்தபின் சேமித்து வைக்கவும்.
 
                  - இதன் மூலம் தானியங்களைப் பூசணங்கள்      தாக்கமால் பாதுகாப்பதுடன் முளைப்புத்திறன் குறைவதையும் தடுக்கலாம்.
 
                | 
           
               
  |