பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பச்சைக்கொம்பு புழு: அகிரோன்ஸியா ஸ்டிக்ஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழு இலையைப் பிண்ணி பிணைத்துக் கொண்டு அதனுள்ளிருந்து இலைகளையும், இளம் குருத்துகளையும் உண்டு சேதப்படுத்தும்
  • வளர்ச்சியடைந்த புழு மொக்கு மற்றும் காய்களை துளைத்து சென்று உண்டு சேதப்படுத்தும்

பூச்சியின் விபரம்:

  • புழு:  இளம் பச்சை நிறத்திலிருக்கும், தலை கருமையாகவும், உடலின் மேற்பரப்பில் வெண்மை நிற ரோமங்கள் காணப்படும்
  • அந்துப்பூச்சி: பழுப்பு நிறமுடையது, முன் இறக்கையில் கருப்பு, பழுப்பு , மஞ்சள் வண்ண புள்ளிகளும் மற்றும் கோடுகளும் காணப்படும், பின் இறக்கையில் மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும்

 

 

 


Crop Protection Sesamum Crop Protection Sesamum Crop Protection Sesamum

கட்டுப்படுத்தும் முறை:

  • நிலத்தை ஆழமாக உழுது அந்துப்பூச்சியின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்
  • கைகளினால் பச்சைக் கொம்பு புழுவைச் சேகரித்து அழிக்கலாம்.
  • நடவு செய்த 30 மற்றும் 45 நாட்கள் கழித்து பாசலான் 4% அல்லது மாலத்தியான்  5% தூவி அந்துப்பூச்சியின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015