பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

1. குருத்து இலைப்பிணைக்கும் புழு: ஆண்டிகேஸ்ட்டிரா கேட்டாலூனாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • இளம் புழு இலையைப் பிண்ணி பிணைத்துக் கொண்டு அதனுள்ளிருந்து இலைகளையும், இளம் குருத்துகளையும் உண்டு சேதப்படுத்தும்.
  • வளர்ச்சியடைந்த புழு மொக்கு மற்றும் காய்களை துளைத்து சென்று உண்டு சேதப்படுத்தும்

 

பூச்சியின் விபரம்

  • புழு: இளம் பச்சை நிறத்திலிருக்கும், தலை கருமையாகவும், உடலின் மேற்பரப்பில் வெண்மை நிற ரோமங்கள் காணப்படும்
  • அந்துப்பூச்சி:  அந்துப்பூச்சி மிகவும் சிறியது, இளம் சிகப்பு கலந்த மஞ்சள் நிறத்திலிருக்கும்.

கட்டுபடுத்தும் முறை :

  • வேப்ப எண்ணெய் 0.03% என்ற அளவில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
  • பின்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும்
    • கார்ப்ரைல் 50 WP 1000 கி/எக்கடர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும்.
    • வேப்பங் கொட்டை சாறு (5%)
    • வேப்ப எண்ணெய் (இரண்டு முறை) 2%
  • தொடர்ந்து ஒரே வகையான பூச்சிக்கொல்லியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

sesanum

sesanum


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015