பச்சை செதிள் பூச்சி: காக்கஸ்  விரிடிஸ் 
              சேதத்தின் அறிகுறி: 
              
                - குஞ்சுகளும்  தாய்ப்பூச்சிகளும் இலைகளின் சாறுகளை உறிஞ்சும்.
 
                - இலைகள்  மஞ்சலாக மாறும்.
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - குஞ்சுகள்  இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
 
                - பூச்சிகள்  தட்டையாகவும் மேற்பாகம் லேசாக குவிந்து மஞ்சள் கலந்த பச்சை நிறமாக இருக்கும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - தாக்குதல்  ஆரம்பிக்கும் பருவத்திலேயே கிளைகளை வெட்டி அழித்துவிட வேண்டும்.
 
                - மோனோகுரோட்டோபாஸ்  1 மி.லி / லிட்டர் (அ) பென்தோயேட் 1 மி.லி / லிட்டர்.
 
                - இரண்டு  வாரங்கள் கழித்து மரத்திற்கு 20 என்ற விகிதத்தில் கிர்டோலேமஸ் மான்ட்ரொஸரி பொரிவண்டை  விடலாம்.
 
                - பாஸ்போமிடான்  215 மிலி (அ) மோனோகுரோட்டோபாஸ் 40 மிலி  மருந்து தண்ணீருடன்  கலந்து தெளித்தால் நாற்றங்காலில் செதில் பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
 
                - நடவு  வயலில் - பாஸ்போமிடான் 300 மிலி, மோனோகுரோட்டோபாஸ் 30 மிலி மருந்தைத் தெளிக்கவும்.
 
               
 | 
              
             
  |