கம்பளிப்புழு: மெட்டனாஸ்டிரியா  ஹிர்டாகா 
                சேதத்தின் அறிகுறி: 
              
                - புழுக்கள்  இலைகளை உண்ணும்.
 
                - இலையுதிரல்  காணப்படும்.
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - புழுக்கள்  சாம்பல் கலந்த பழுப்பு நிறத்தில் நீண்ட உரோமங்களுடன் கரும்புள்ளிகளுடன் காணப்படும்.
 
                - பெண்  பூச்சி பருமனாக சாம்பல் கலந்த பழுப்பு நிற இறக்கைகளுடன் காணப்படும்.
 
                - முன்  இறக்கையின் கருப்புத்திட்டில் ஒரு வெள்ளைப் புள்ளி இருக்கும்.
 
                - பின்  இறக்கைகள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
 
               
              
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - களத்தை  தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
 
                - முட்டை  குவியலை எடுத்து அழிக்க வேண்டும்.
 
                - மரத்தின்  கழுத்துப்பகுதியில் கூட்டமாக தோன்றும் புழுக்களை தீயை மூட்டி அழிக்க வேண்டும்.
 
                - குளோர்பைரிபாஸ்  20 இ.சி (அ) பாசலோன் 2 மி.லி / லிட்டர்.
 
                - கார்பரில்  10டி பவுடரை கிளைகள் மீது போடலாம்.
 
                - சால்சிடிட்  குழவி, பிரக்கைமெரியா வகை தாக்கப்பட்ட தோட்டத்தில் விடலாம்.
 
               
              Image Source: 
              http://www.nbair.res.in/insectpests/Metanastria-hyrtaca.php  |