இலைப்பிணைக்கும் புழு (அ)  சிக்கூ அந்துப்பூச்சி: நெப்போடரிக்ஷி யூக்ராஃபில்லா 
                சேதத்தின் அறிகுறி: 
              
                - இலைகள்  மெல்லிய நூலாம்பட்டையால் பிணைக்கப்பட்டு சுரண்டி தின்னப்பட்டிருக்கும்.
 
                - இலைகள்  காய்ந்தும் பிணைக்கப்பட்ட தண்டுகளில் காய்ந்த இலைகள் தொங்கிக் கொண்டு இருக்கும்.
 
                - புழுக்கள்  பூமொட்டுக்களுக்குள் துளையிட்டு பூக்களை உதிரச் செய்யும்.
 
               
               பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை  - மஞ்சள் நிறமாகவும் நீள்வட்ட வடிவிலும் காணப்படும்
 
                - புழுக்கள்  மங்களான சிவப்பு நிறத்தில் பக்கவாட்டில் கோடுகளுடன் இருக்கும்
 
                - அந்துப்பூச்சி  சாம்பல் நிறமாக கரும்புள்ளிகளுடன் காணப்படும்
 
               
              
                
                  
                      | 
                      | 
                   
                  
                    | Symptom | 
                    Adult | 
                   
                
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - தாக்கப்பட்ட  பழங்களை பிடுங்கி தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்
 
                - சேதமடைந்த  (அ) தாக்கப்பட்ட கிளைகளை அகற்றிவிட வேண்டும்
 
                - பாசலோன்  35 இ.சி 2 மிலி / லிட்டர் (அ) பாஸ்பாமிடான் 40 எஸ்.எல. 2 மிலி / லிட்டர் (அ) வேப்பங்கொட்டை  சாறு 5 சதவீதம்.
 
              |