தண்டு துளைப்பான்: புளேக்கேடரஸ்  பெருஜினஸ் 
              சேதத்தின் அறிகுறி: 
              
                - மரத்தின்  கழுத்துப்பட்டை பகுதியில் சிறுசிறு துளைகள் தோன்றும்.
 
                - மரத்திலிருந்து  தேன் போன்ற திரவம் வடிவதை காணலாம்.
 
                - மரத்தின்  கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள சிறு துவாரங்களில் இருந்து புழுக்களின் கழிவுகள் வெளியே தள்ளப்பட்டிருக்கும்.
 
                - இலைகள்  மஞ்சள் நிறமாக மாறி உதிர்ந்துவிடும்.
 
                - மரக்கிளையின்  குச்சிகள் காய்ந்து படிப்படியாக மரம் முழுவதும் காய்ந்துவிடும்.
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - தாய்ப்பூச்சி  நடத்தர அளவிலும் பழுப்பு கலந்த சிவப்பு நிறத்திலும் காணப்படும்.
 
                - தலை  மற்றும் கழுத்துப் பகுதி கரும் பழுப்பு நிறத்தில் அல்லது கருப்பு நிறத்திலும் காணப்படும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - தாக்கப்பட்ட  பகுதிகளையும் காய்ந்த கிளைகளையும் நீக்கி அழித்தவிட வேண்டும்.
 
                - நிலத்தை  சுத்தமாக வைக்க வேண்டும்.
 
                - தார்  மற்றும் மண்ணெண்ணையை 1:2 என்ற கலவையில் தாக்கப்பட்ட பகுதியில் பூசவேண்டும்.
 
                - மரத்தின்  அடிப்பகுதியிலிருந்து 3 அடி உயரத்தில் கார்பரில் 50 டயில்யூபி 20 கிராம் மருந்தினை  எடுத்து தாக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். பின்னர் மரப்பட்டையை சுரண்டிவிட்டால் வண்டுகள்  முட்டையிடுவதை தவிர்க்கலாம்.
 
                - வண்டு  சேதப்படுத்திய துளையிலிருந்து புழுவை அகற்றி பின்பு கார்போபியூரான்  குருணை மருந்தை ஒரு துளைக்கு 5 கிலோ வீதம் செலுத்திய பின்பு களிமண் வைத்து துளையை  அடைத்து விட வேண்டும்.
 
                - தாக்கப்பட்ட  துளையினுள் ஒரு செல்பாஸ் வில்லையை போட வேண்டும்.
 
                | 
              
             
  |