பயிர் பாதுகாப்பு ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

சேம்பப்பூ அசுவினி: யுரோலூகான் கார்த்தாமி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது
  • தாக்கப்பட்ட இலைகள் சுருண்டு மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • குஞ்சுகள் கழிவுநீர் போன்ற திரவத்தை இலைகளின் மேற்பரப்பில் சுரக்க செய்யும்
  • தாக்கப்பட்ட இலைகள் கேப்னோடியம் என்ற பூஞ்சையினால் கவரப்பட்டு கருமை நிறமாக மாறிவிடும்
  • இறுதியாக செடிகள் காய்ந்து விடும்

பூச்சியின் அடையாளம்:

  • குஞ்சுகள்:  சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் இருக்கும்
  • அசுவினி:  கருமை நிறமுடையது, வயிற்று பகுதிக்குக் கீழே இரண்டு குழாய் போன்ற நீட்சிகளைக் கொண்டிருக்கும்

Crop Protection Safflower

கட்டுப்பாடு: 

  • காலம் கடந்து விதைத்தலைக் தவிர்த்தல் வேண்டும்
  • தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்
  • மக்காச் சோளம், சோளம் ஆகியவற்றை ஊடுபயிராக 3 வரிகளுக்கு இடை இடையில் நடலாம்
  • செடிக்கு 1 - 2 கிரைசோபெர்லா புழுவை வெளியிட்டு அசுவினியை அழிக்கலாம்
  • இயற்கை எதிரிகளான ஏபிலினஸ், மைக்ரோமஸ் ஆகியவற்றை பயன்படுத்தி அசுவினியின்  எண்ணிக்கையைக் குறைக்கலாம்
  • நடவு செய்த 60 நாட்கள் கழித்து டைமீத்தேயேட் 750 மிலி மருந்தை எக்டர்க்கு 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து அசுவினியின் தாக்குதலைக் குறைக்கலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015