பயிர் பாதுகாப்பு ::குசும்பா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

காய்த்துளைப்பான்: ஹெலிகோவெர்பா ஆர்மிஜீரா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இளம் புழு இலைகளையும், நுனிக்குருத்துகளையும் தாக்கி சேதப்படுத்தும்
  • வளர்ச்சியடைந்த புழு காய்களைத் துளைத்து உட்சென்று திசுவை உண்கிறது
  • சேதம் அதிகமாகும் நிலையில், புழு மொக்கு முழுவதையும் உண்டு சேதப்படுத்தும்
பூச்சியின் அடையாளம்:
  • முட்டை: வெள்ளை நிறமாக இருக்கும், மற்றும் முட்டை தனித்தனியாக இடப்பட்டிருக்கும்
  • புழு: பச்சைக் கலந்த பழுப்பு நிறத்தல் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறக்கோடு காணப்படும்
  • கூட்டுப்புழு: பழுப்பு நிறமுடையது, மண்,இலை மற்றும் காய்களில் காணப்படும்
  • அந்துப்பூச்சி: பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். . முன் இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறத்துடன், அடர் பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளி நடுவிலும் காணப்படும். பின் இறக்கைகள் இளம் புகை வெள்ளை நிறத்துடன், அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும்
Crop Protection Safflower Crop Protection Safflower Crop Protection Safflower
புழு கூட்டுப்புழு அந்துப்பூச்சி
கட்டுப்படுத்தும் முறை:
  • கோதுமை அல்லது வார்கோதுமை ஆகியவற்றை ஊடு பயிராக பயிரிடலாம்
  • ஊடு பயிராக கொண்டை கடலையை பயிர் செய்யக் கூடாது
  • தேவைக்கு அதிகமான நைட்ரஜன் உரங்களைத் தவிர்க்க வேண்டும்
  • Ha NPV வைரஸ் 250-300 புழு கரைசல்/எக்கடர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்இயற்கை எதிரிகளான காம்போலிடிஸ் குளோரிடே, எனிகோஸ்பில்லஸ் ஆகியவற்றை பயன்படுத்தி காய்ப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015