ஆமணக்கு காவடிப்புழு: அக்கேயா ஜனாதா 
              தாக்குதலின்  அறிகுறிகள் 
              
                - புழு இலையை உண்டு சேதம் பண்ணும்.
 
               
              பூச்சியின்  அடையாளம் 
              
                - வளர்ச்சியடைந்த புழு கருமை நிற தலையைக்  கொண்டிருக்கும். உடலின் மேற்பரப்பில் சிகப்புநிற புள்ளிகள் காணப்படும்.
 
                - அந்துப்பூச்சி சிகப்பு கலந்த பழுப்பு  நிறத்திலிருக்கும். இரண்டு இறக்கையிலும் பெரிய திட்டுகளும் மூன்று கரும்புள்ளிகளும்  காணப்படும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறை 
 
              
                - கைகளினால் புழுக்களை சேகரித்து அழிக்கலாம்.
 
                - வேப்பம்சாறு கொட்டை 5 சதம் தெளித்து  காவடிப் புழுவின் முட்டை மற்றும் புழு பருவத்தை அழிக்கலாம்.
 
                - ட்ரைக்கோகிரைமா என்ற முட்டை ஒட்டுண்ணியை  எக்டர்க்கு 50,000 வெளியிட்டு காவடிப்புழுவின் முட்டை குவியலை அழிக்கலாம்.
 
                - குவினால்பாஸ் அல்லது குளோர்பைரிபாஸ்  ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில்  கலந்து தெளிக்கவும்.
 
                - பறவை இருக்கையை ஏக்கர்க்கு 10 வீதம்  அமைத்து காவடிப்புழுவின் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
 
                | 
              
               |