பயிர் பாதுகாப்பு :: ரோஜா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

செதில்பூச்சி: லின்டின்கேஸ்பிஸ் ரோஸி

சேதத்தின் அறிகுறி:

  • தண்டை முழுவதுமாக செதில்பூச்சி சூழ்ந்து இருக்கும்
  • தாவரத்தின் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்துவிடும்
  • தாக்கம் அதிகமாக இருந்தால் தாவரங்கள் காய்ந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • செம்பழுப்பு நிற மெழுகு செதில்பூச்சி பழைய தண்டுகளின் அடிப்பகுதியில் தோன்றும்
  • பெண்பூச்சி பெரிதாகவும், இறக்கையற்றும் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:                 

  • தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி எரிக்க வேண்டும்
  • மண்ணெண்ணையில் (அ) டீசலில் பஞ்சை நனைத்து செதில்பூச்சியை சுரண்டிவிட வேண்டும்
  • மாலத்தியான் 2மி.லி / லிட்டர் கிளைகளை வெட்டிய பிறகு தெளிக்கவும்
  • கார்போபியுரான் 5 கிராம் / தாவரம் மீன் எணஃணெய் ரோசின் சோப்பு 25 கிராம் / லிட்டரில் கரைத்து தெளிக்கவும்

 

Scale Insect Rose

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015