தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - புழுக்கள்      இரவு நேரத்திற்குள் நாற்றங்காலில் உள்ள பயிர்கள் முழுவதையும் உண்டு விடும்.
 
                      - நெற்பயிரின்      இலை விளிம்புகளை புழுக்கள் கடித்து உண்ணும்.
 
                      - இலைகளை      ஒழுங்கற்ற முறையில் ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும்.
 
                      - நாற்றுக்களை      ஒழுங்கற்றவாறு உண்டுவிடும்.
 
                      - இலை      நரம்பை தவிர பயிர்கள் முழுவதையும் கடித்து உண்டுவிடும்.
 
                     
                    பூச்சியின் விபரம்: 
                    
                      - முட்டை: இலைகளின் மீது      கொத்தாக மஞ்சள் நிற முடிகளுடன் கூடிய முட்டைகளை இடும்.
 
                      - புழு: புழுக்கள் மஞ்சள்      நிறத்தில் சிவப்பு நிற வரிகளுடன், ஆரஞ்சு நிற தலையுடன் காணப்படும். உடல் முழுவதும்      உரோமங்கள் இருக்கும். இதில் நுனிப்பகுதியில் இரண்டும், பின்பகுதியில் இரண்டும்      தெளிவாக தெரியும்.
 
                      - கூட்டுப்புழு: மஞ்சள் நிற பட்டு      போன்ற கூட்டுடன் இலையின் மீதிருக்கும்.
 
                      - அந்துப்பூச்சி: அந்துப்பூச்சிகள்      இளம் மஞ்சள் நிறத்தில் இரு உணர் கொம்புகளுடன் காணப்படும்.
 
                     
                  கட்டுப்படுத்தும் முறை: 
                    
                      - வயலில்      நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு      1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
 
                     
 | 
                  
                    
                        | 
                        | 
                     
                    
                      | புழுக்கள் இலைகளை ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும் | 
                      புழுக்கள் இலை நரம்பை தவிர பயிர்கள் முழுவதையும் கடித்து உண்டுவிடும் | 
                     
                                       
                      
                          | 
                          | 
                       
                      
                        | கம்பளிப்புழு | 
                        முதிர்பூச்சி | 
                       
                    |