பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கொம்புப்புழு: மெலானிடிஸ் இஸ்மேனே

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழு கடித்த இலைகள்.
  • நெற்பயிரின் இலை விளிம்புகளை புழுக்கள் கடித்து உண்ணும்.
  • இலைகளை ஒழுங்கற்ற முறையில் ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை:  இலைகளில் வெள்ளை நிற முட்டைகள் தனித் தனியாக இருக்கும்.
  • புழு: தட்டையாக, இரண்டு சிவப்பு நிற கொம்புகள் தலைப் பகுதியில் இருக்கும். இரண்டு மஞ்சள் நிற கொடுக்கு நுனியில் இருக்கும்.
  • கூட்டுப்புழு: இலையில் மறைந்திருக்கும்
  • அந்துப்பூச்சி: அடர் பழுப்பு நிறத்துடன் பெரிய இறக்கைகளுடன் கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு முன்னிறக்கையிலும் மஞ்சள் நிற கண் போன்ற புள்ளி காணப்படும்.

 

கட்டுப்படுத்தும் முறை:

  • வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
புழுக்கள் ஒழுங்கற்ற முறையில் இலைகளை உண்ணும் வெட்டுப்புழு இலைகளில் தென்படும்
புழு முதிர் பூச்சி
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015