தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - புழுக்கள்      நாற்றுக்களை அதிகளவில் வெட்டிவிடும்
 
                      - அதிக      தாக்குதலின் போது மாடு புல் மேய்ந்த நிலம் போல் காட்சியளிக்கும்
 
                      - புழுக்கள்      இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக அருகேயுள்ள வயலுக்குச் சென்று திவிரமாக தாக்கும்
 
                     
                    பூச்சியின் விபரம்: 
                    
                      - முட்டை: முட்டைகள்      வட்டமாக, பால் வெள்ளை நிறத்தில், சாம்பல் நிற முடிகளுடன் கூட்டமாக இடப்பட்டிருக்கும்.
 
                      - புழு: புழுக்களின் இளம் வளர்ச்சி      நிலையில் மங்கிய பச்சை நிறத்திலும், மேல்புறம் மற்றும் பக்கவாட்டில் மஞ்சள் கலந்த      வெள்ளை நிற கோடுகளுடனும் காணப்படும். பின்னர் அவை அரை வட்ட வடிவமாக, அடர்பழுப்பு      அல்லது சாம்பல் கலந்த பச்சை நிறத்தில், பக்கவாட்டில் கருப்புப் புள்ளிகளுடனும்      காணப்படும்.
 
                      - கூட்டுப்புழு: மண்ணில்      கூட்டுப்புழுவை உருவாக்குகின்றன. அடர்பழுப்பு நிறத்தில் 16-17 மி.மீ நீளத்துடன்      காணப்படும்.
 
                      - அந்துப்பூச்சி: முதிர் அந்துப்பூச்சிகள்      நடுத்தர அளவில், பருமனாக அடர்பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறக்கைகளில் நன்கு      தெரிகிற முக்கோண வடிவ கரும்புள்ளிகள் காணப்படும். பின் இறக்கைகள் பழுப்பு கலந்த      வெள்ளை நிறத்தில், ஓரங்களில் மெல்லிய கருப்பு நிறத்துடன் காணப்படும்.
 
                     
                    கட்டுப்படுத்தும் முறை: 
                    
                      - குளோரோபைரிபாஸ் 20% EC 1250 மி.லி /ஹெக்டேர் என்ற வீதம் மாலை நேரத்தில் தெளிக்கவும் 
 
                      | 
                  
                    
                        | 
                        | 
                     
                    
                      | புழு | 
                      கூட்டுப்புழு | 
                     
                    
                        | 
                        | 
                     
                    
                      | முதிர்பூச்சி | 
                     
                    |