| இலைப்பேன்: ஸ்டெஃங்கீட்டோத்ரிப்ஸ் பைபார்மிஸ் | 
                
                
                  தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - இளம்      இலைகளை சுரண்டி, சாற்றை உறிஞ்சுகிறது
 
                      - தாக்கப்பட்ட      இளம் நாற்றுக்களில் மஞ்சள் அல்லது வெள்ளை நிற வரிகள் காணப்படும்
 
                      - தாக்கப்பட்ட      இலைகளின் நுனி சுருண்டு இறுதியில் வாடிவிடும்
 
                      - நாற்றங்கால்      மற்றும் நடவு வயலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்
 
                      - தாக்குதல் அதிகமாகும் போது இலையானது உதிர்ந்துவிடும்
 
                      - தாக்குதலுக்குள்ளான நெற்கிதர்களில் மணிகள் பூர்த்தியாகாமல் இருக்கும்
 
                      | 
                  
                    
                        | 
                        | 
                     
                    
                      | இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருட்டப்படும் | 
                     
                    | 
                
                
                  பூச்சியின் விபரம்: 
                    
                      - முட்டை: முட்டைகள் நிறமில்லாமலும்,      பின் முதிர்ச்சிடையும்போது, வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைத்தாள் திசுக்களின்      பிளப்புகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். முட்டையின் மேல்பகுதியின் பாதி வெளிப்படுத்தியிருக்கும்.
 
                      - புழு: புதிதாக பொரிக்கப்பட்ட      இளம்பூச்சிகள் தெள்ளத் தெளிவாக இருக்கும். ஆனால் முதல் தோல் உரித்தலுக்குப் பிறகு      மஞ்சளான வெள்ளை நிறமாக மாறி பின் கருப்பான கால்கள், தலை மற்றும் உணர்கொம்புகளை      உருவாக்குகிறது. திறக்கப்படாத இளம் இலைகளின் மென்மையான திசுக்களை இளம் புழுக்கள்      உட்கொள்ளும்.
 
                      - கூட்டுப்புழு: சுருண்ட இலைகளின் உள்ளே      கூண்டுப்புழு ஏற்படும். மேலும் அதன் புடைவளர்ச்சி மற்றும் இறக்கைகள் வளர்ச்சி      தெளிவாகக் காணப்படும்.
 
                      - அந்துப்பூச்சி: முதிர்ச்சியடைந்த      பூச்சிகள் 1-2 மி.மீ நீளம் கொண்டு கரும்பழுப்பு முதல் கருப்பு நிறத்துடன் மயிரிழைகளாலான      இறகுகளைக் கொண்டிருக்கும். ஆண் பூச்சிகள் பெண் இனப்பூச்சிகளைவிட சிறியதாகவும்,      மெலிந்தும் காணப்படும். பூச்சித் தொகையில் ஆண் இனப் பூச்சிகள் மிக அரிதாக காணப்படுவதால்,      கன்னி இனப்பெருக்கமுறையைக் கொண்டுள்ளது. (பாலினச் சேர்க்கையில்லாத இனப்பெருக்கம்)
 
                      | 
                  
                      
                          | 
                          | 
                       
                      
                        இளம் பூச்சி  | 
                        முதிர்பூச்சி | 
                       
                      | 
                
                
                  கட்டுப்படுத்தும் முறை:  
                      பொருளாதார சேத நிலை அளவு: உள்ளங்கையை நீரால் நனைத்து, பின் நாற்றங்காலில் 12 இடங்களில் பயிர்ச் செடிகளின் மேல் கையைக் கொண்டு செல்ல வேண்டும். 12 முறைகளில், செடிப்பேனின் தொகை 60 எண்ணிக்கையைக் கடந்துவிட்டால் (அ) 10 சதவிகித நாற்றுக்களில் முதல் மற்றும் இரண்டாம் இலைகளின் பாதிப்பரப்பு சுருண்டு காணப்படும். 
                    
                      - பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
                        
                          - பாஸ்போமிடான் 40 SL 600 மி.லி/ஹெக்டேர்
 
                          - அசார்டியாக்டின் 0.15%W/W 1500-2500 கி/ஹெக்டேர்
 
                          - தையமீத்தாச்சம் 25% WG 100 கி/ஹெக்டேர்
 
                         
                       
                    |