தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - பால்      பருவத்திலிருக்கும் நெல் மணிகளிலிருந்து சாறு உறிஞ்சப்படும்
 
                      - நெல்மணிகள்      விதையற்று பதராக மாறி நிமிர்ந்த பூங்கொத்துக்களைக் கொண்டிருக்கும்.
 
                      - நெல்      மணிகளில் பூச்சி உட்கொண்டு துளைகளில் கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்
 
                      - பால்      பருவத்தின் போது நெல்வயலில், நாவாய்ப்பூச்சிகளின் வெறுக்கத்தக்க ஒரு மணம் வீசும்.
 
                   
                    பூச்சியின் அடையாளம்: 
                    
                      - முட்டை: முட்டைகள் வட்டமாக      பழுப்பு நிற விதை போன்று, 2 மி.மீ நீளம் கொண்டு இரு வரிசைகளில் கூட்டமாக வைக்கப்பட்டிருக்கும்.      இலைத்தாளின் மேல்பரப்பில் உள்ள இலை நடுநரம்பு பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
 
                      - இளம்      பூச்சிகள்: முதல்      வளர்நிலை பூச்சிகள் மிகவும் சிறியதாக, 2 மி.மீ நீளம் கொண்டு, வெளிறிய பச்சை நிறமாக      இருக்கும். பின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளில் ஆழ் பச்சை (கரும்பச்சை) நிறமாக      மாறிவிடும்.
 
                      - முதிர்ப்பூச்சிகள்: முதிர்ச்சி நிலையை      அடைந்த பூச்சிகள் பச்சையான மஞ்சள் நிறமாகவும், நீளமாக மெலிந்தும் ½ அங்குலம் நீளமுடன்      நாவாய்ப்பூச்சிக்குரிய வெறுக்கத்தக்க ஒரு மணமுடன் இருக்கும்.
 
                    | 
                  
                    
                        | 
                     
                    
                      | பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிலிருந்து சாறு உறிஞ்சப்படகிறது | 
                       
                    
                        | 
                        | 
                        | 
                       
                    
                        | 
                        | 
                       
                    
                      | பாதிக்கப்பட்ட நெல் மணிகள் | 
                      தானிய மணிகளின் மீது கடித்த காயங்களும் புள்ளிகளும் காணப்படும் | 
                     
                    |