பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மாவுப்பூச்சி: பிரவேனியா ரெகி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சுவதால் சேதம் ஏற்படுகிறது.
  • பூச்சித் தாக்கப்பட்ட வயல்களில் பயிர்கள் வளர்ச்சி குன்றி, நோய் தாக்கப்பட்ட பயிர்களைப் போன்றுத் தனிப்பட்ட பத்தைகளாகக் காணப்படும்.
  • இலையுறைகளில் வெள்ளைநிற மெழுகு போலக் காணப்படும்.
மாவுப்பூச்சித் தாக்கப்பட்ட வயல்

 பூச்சியின் அடையாளம்:

  • முட்டை: பெண் பூச்சிகள் அதிக அளவிலான மஞ்சள் கலந்த வெள்ளைநிற முட்டைகளை இடும்/இளங்குஞ்சுகளை வெளிப்புற இலையுறைகளில் வெளியிடும்.
  • புதிதாக பொரிக்கப்பட்ட இளங்குஞ்சுகள் பயிரின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவுவதற்கு முன் அதிலிருக்கும் மெழுகு போன்ற நுால்களுக்குள் கூட்டமாக 6-10 மணி நேரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்.
  • வெளிரிய மஞ்சள் நிற இளங்குஞ்சுகள் பயிரினைச் சுற்றி சிறிது நேரம் ஊர்ந்து சென்று செடியிலோ/தண்டிலேயோ தங்கிக் கொண்டு, பின் ஒரு நாளுக்குப் பிறகு நன்கு மஞ்சள் நிறமாக மாறிவிடும். இரண்டாவது நாளில் அதன் உடல் மெழுகுப் பொருளால் போர்த்தப்பட்டிருக்கும்.
  • முதிர்பூச்சி: இறக்கைகள் இல்லாததால் இளம்பூச்சிகளும், வளர்ச்சிபெற்ற பூச்சிகளும் ஒன்று போலவே காணப்படும். இறக்கைகள் இல்லாத இப்பூச்சிகள் இழைவடிவமுடைய பொருள்களால் போர்த்தப்பட்டிருக்கும். பெண் பூச்சிகள் சிவப்பு நிறத்தில் முட்டை வடிவமாகவும், மென்மையான உடலுடனும் இலையுறைகளுக்குள் கூட்டமாக வாழும்.
  • ஆண் பூச்சிகள் சிறியதாகவும் மெலிந்தும், வெளிரிய மஞ்சள் நிறத்தில், ஒரு ஜோடி இறக்கைகளையும் வயிற்றுப்பகுதியின் முடிவில் சூல்தண்டு போன்ற அமைப்புடனும் காணப்படும். ஆனால் வாய்ப்பகுதிகள் இருக்காது.
மாவுப்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

  • வரப்புகளிலிருந்து புல் வகைக் களைகளை அகற்றி வரப்புகளை சீர் செய்ய வேண்டும்
  • பூச்சி தாக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்தல் வேண்டும்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
    • பியுப்ருனின் 25 SC 200 மி.லி/200 லி தண்ணீர் கலந்து ஒரு ஹெக்டேர்் வரை தெளிக்கவும்.
    • தையோமீத்தாகசம் 20 WDG 100கி/ 200லி தண்ணீரில் கலந்து ஒரு ஹெக்டேர்்வரை வெளிக்கவும்.
    • டைமீத்தோயேட் 30 EC 400 மி.லி +அசார்டியாக்னெ் 1000 PPM என்று அளவில் கலந்து தெளிக்கவும்
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015