| வெள்ளை தத்துப் பூச்சி: சோகடெல்லா ப்ரூசிஃபெரா | 
                
                
                  தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - நெற்பயிர்ச்      செடியின் சாறை உறிஞ்சி பயிர் வளர்ச்சியைத் தடுக்கிறது. எனவே பயிர்ச்செடி வளர்ச்சிகுன்றி      குட்டையாக காட்சியளிக்கும்
 
                      - முன்      தாக்குதலின்போது வட்டமான மஞ்சள் நிற திட்டுகள் தோன்றி பின் உடனே பயிர் காய்ந்து      பழுப்பு நிறமாக மாறிவிடும்
 
                      - பின்      பூச்சி தாக்கப்பட்ட திட்டுகள் பரவுதல் ஏற்பட்டு முழு வயலையும் தாக்கிவிடும்
 
                      - இளம்      மற்றும் முதிர்ப்பூச்சிகள் செடியின் சாறை உறிஞ்சும். இதனால் செடியின் வளர்ச்சி      குன்றி பின் காய்ந்துவிடும்
 
                    | 
                  
                    
                        | 
                        | 
                     
                    
                      | பயிர்கள் காய்ந்து பழுப்பு நிறமாக மாறிவிடும். | 
                      பயிர்கள் வளர்ச்சிகுன்றி குட்டையாக காட்சியளிக்கும் | 
                     
                                       
  | 
                
                
                  பூச்சியின் அடையாளம்: 
                    
                      - முட்டை: நெற்பயிர் செடி      சிறியதாக இருக்கும்போது பூச்சிகள் உருளைவடிவ முட்டைகளை அதன் மேல் கூட்டமாக வைத்திருக்கும்.      ஆனால் செடிகள் பெரிதாக இருக்கும்போது நெற்பயிரின் மேல் பகுதியில் முட்டைகளை வைத்திருக்கும்.
 
                      - இளம்      பூச்சிகள்: வெள்ளை      நிறத்திலிருந்து நன்கு பல் வண்ணப்புள்ளியுடைய கருஞ்சாம்பல் நிறம் அல்லது கருப்பு      மற்றும் வெள்ளை நிறமாகவும், இளமையாய் இருக்கும்போது 0.6 மி.மீ அளவிலும் காணப்படும்.      ஐந்து வளர்ச்சிநிலை இளம்பூச்சிகள் குறுகலான தலையுடன் வெள்ளை அல்லது பாலேடு நிற      உடலுடன் இருக்கும். நெஞ்சுக்கூட்டின் மேல்புறம் மற்றும் அதன் வயிற்றுப்பகுதி வேறுபட்ட      அளவிலான சாம்பல் மற்றும் வெண்நிற குறிகளைக் கொண்டு குறியிடப்பட்டிருக்கும்.
 
                      - அந்துப்பூச்சி: முதிர்ந்த தத்துப்பூச்சிகள்      3.5-4.0 மி.மீ அளவு நீளமுடன் இருக்கும். அதன் முன் இறக்கைகள் சீராக நிறமற்றும்      அதில் கருநிற நரம்புகளுடனும் காணப்படும். அதன் இறக்கைகளின் சந்திப்புக்கிடையே      நிலையான வெண்நிற பட்டையைக் கொண்டிருக்கும். பெரு இறக்கைகளையுடைய ஆண் மற்றும் பெண்      இனப் பூச்சிகள் மற்றும் சிற்றிறக்கைகளையுடைய பெண் இனப் பூச்சிகள் ஆகியவை பொதுவாக      நெல்வயலில் காணப்படும்.
 
                    | 
                  
                    
                        | 
                        | 
                     
                    
                      | முதிர்பூச்சி | 
                      இளம்குஞ்சு | 
                     
                    | 
                
                
                  கட்டுப்படுத்தும் முறை: 
                    
                      - பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்
                        
                          - பாஸ்போபிடான் 40 எஸ்.எல் 1000 மி.லி / ஹெக்
 
                          - சார்டியாக்டின் 0.03% 1000 மி.லி /ஹெக்டேர்
 
                          - பியுப்ருசின் 25% SC 800 மி.லி /ஹெக்டேர்
 
                          - கார்போசல்பான் 25 EC 800-1000 மி.லி /ஹெக்டேர்
 
                          - குளோரோடேரினிலிபுருள் 18.5% SC 150 கி/ஹெக்டேர்
 
                          - டைகுளோரோவாஸ் 76% SC 470 மி.லி/ஹெக்டேர்
 
                          - பைப்பரினில் 5 % SC 1000-1500 மி.லி/ஹெக்டேர்
 
                          - பைப்பரினில் 0.3% GR 16670-25000 கி /ஹெக்டேர்
 
                          - இமடாகுளோபிரிட் 70% WG 30-35 கி.கி /ஹெக்டேர்
 
                          - இமடாகுளோபிரிட் 17.8 SL 100-125 மி.லி/ஹெக்டேர்
 
                          - பாசலான் 1428 மி.லி/ஹெக்டேர்
 
                          - குயின்லபாஸ் 25 EC 1500 மி.லி/ஹெக்டேர்
 
                          - ட்ரைஅசோபாஸ் 40% EC 625-1250 மி.லி/ஹெக்டேர்
 
                         
                       
                                        |