பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
தண்டுத் துளைப்பான்: சிர்போபேகா இன்ஸெர்டுலஸ

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக் கூட்டம் காணப்படும்
  • தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்துவிடுகிறது. இதுவே "குருத்து காய்தல்" எனப்படுகிறது.
  • நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிர்களும் காய்ந்துவிடும். மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே "வெண்கதிர்" எனப்படுகிறது.
  • குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும்.
  • பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் இருக்கும்
காய்ந்த நடுக்குருத்து வெண்கதிர்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டைகள் பாலேடு போன்ற வெள்ளை நிறமாகவும் தட்டையாகவும், முட்டை வடிவத்திலும் இருக்கும். இவை கூட்டமான திரளாக இடப்பட்டு வெளிர் மஞ்சள் நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் இலைகளின் நுனிப் பகுதிக்கருகே வைக்கப் பட்டிருக்கும்.
  • புழு: வெளிரிய மஞ்சள் நிறத்தில் கரும்பழுப்பு நிற தலை கொண்டு அதில் முன் மார்புக் கவசத்துடன் காணப்படும்.
  • கூட்டுப்புழு: வெள்ளை நிற கூண்டுப்புழுவாதலால் நெற்பயிர் தண்டுகளுக்குள்ளே ஏற்படும், அல்லது வைக்கோல் மற்றும் பயிர்த் துார்களின் உள்ளேயும் ஏற்படும்.
  • அந்துப்பூச்சி: 

பெண் அந்துப்பூச்சி: முன் இறக்கைகளின் நடுப்பகுதி நன்கு பிரகாசமான மஞ்சளான பழுப்பு நிறத்தில் கருப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். மேலும் அதன் மலப்புழைப் பகுதியில் மஞ்சள் நிற மயிர்கற்றை இருக்கும். 
ஆண் அந்துப்பூச்சி: சிறிய மற்றும் வெளிரிய மஞ்சள் நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும். இதில் கருப்புப் புள்ளிகள் இருக்காது.

 
சில்லோ பாலிக்ரைசிஸ்
புழு  
முதிர்பூச்சி
சில்லோ சப்ரசாலிஸ்
புழு 
முதிர் பூச்சி
சிர்போபேகா இன்ஸெர்டுலஸ் 
புழு முதிர் பூச்சி
செசாமியா  இன்பிரென்ஸ்
புழு  
முதிர் பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை அளவு: 25%"குருத்து காய்தல்" அல்லது 2 முட்டை குவியில்/மீட்டர்

  • முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் எக்டருக்கு 5 மி.லி வீதம் இரண்டு முறை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.நாற்றுக்களை நெருக்கமாக நடுதலைத் தவிர்க்க வேண்டும்.
  • வேப்பக் கொட்டைச் சாறு தெளிப்பதன் மூலம் தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்தலாம்
  • நாற்று நடும் போது நாற்றின் நூனியை கிள்ளி விடுவதால் தண்டுத் துளைப்பானின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
    • பாசலான் 35 EC 1500-மி.லி/ஹெக்டேர்
    • அசிபேப் 75% SP 666-1000 கி/ஹெக்டேர்
    • அசார்டியாக்டின் 0.03% 1000 மி.லி/ஹெக்டேர்
    • கார்போபியுரான் 3% CG 25 கி.கி/ஹெக்டேர்
    • கார்போசல்பான் 6% G 16.7 கி.கி/ஹெக்டேர்
    • கார்போசல்பான் 25% EC 800-1000 மி.லி/ஹெக்டேர்
    • கார்டேப்ஹைட்ரோகுளோரைடி 50% SP 1 கி.கி/ஹெக்டேர்
    • குளோரோடேரேனிலிபுருள் 0.4% G 10 கி.கி/ஹெக்டேர்
    • குளோரோனபரிபாஸ் 20% EC 1.25 லி/ஹெக்டேர்
    • பைப்ரினில் 5% SC 1000-1500 கி/ஹெக்டேர்
    • குளோரோடேரேனிலிபுருள் 20% EC 1.25 லி /ஹெக்டேர்
    • பைப்ரினில் 80% WG 50-62.5 கி.கி/ஹெக்டேர்
    • புளுபென்டிமைட் 20% WG 125 கி/ஹெக்டேர்
    • புளுபென்டிமைட் 39.35% SC 50 கி/ஹெக்டேர்
    • பாஸ்போமிடான் 40% SL 1250 மி.லி/ஹெக்டேர்

 

பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்:

 

எதிர்ப்பு இரகம் ஏடிடீ 47 டிரைக்கோகிராமா முட்டை அட்டை டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம்

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015