| தண்டுத் துளைப்பான்: சிர்போபேகா  இன்ஸெர்டுலஸ் | 
                
                
                  தாக்குதலின் அறிகுறிகள்: 
                    
                      - இலையின்      நுனியில் பழுப்பு நிற முட்டைக் கூட்டம் காணப்படும்
 
                      - தழைப்பருவத்தில்      புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி      காய்ந்துவிடுகிறது. இதுவே "குருத்து காய்தல்" எனப்படுகிறது.
 
                      - நன்கு      வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிர்களும் காய்ந்துவிடும். மிஞ்சியிருக்கும்      தட்டையான தானியங்களே "வெண்கதிர்" எனப்படுகிறது.
 
                      - குருத்தைப்      பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும்.
 
                      - பழுப்பு      நிற அந்துப்பூச்சிகள் வயலில் இருக்கும்
 
                    | 
                   
                    
                    
                        | 
                        | 
                     
                    
                      | காய்ந்த நடுக்குருத்து | 
                      முட்டை திரள்  | 
                     
                    | 
                
                
                  பூச்சியின் விபரம்: 
                    
                      - முட்டை: முட்டைகள் பாலேடு      போன்ற வெள்ளை நிறமாகவும் தட்டையாகவும், முட்டை வடிவத்திலும் இருக்கும். இவை கூட்டமான      திரளாக இடப்பட்டு வெளிர் மஞ்சள் நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும்      இலைகளின் நுனிப் பகுதிக்கருகே வைக்கப் பட்டிருக்கும். 
 
                      - புழு: வெளிரிய மஞ்சள் நிறத்தில்      கரும்பழுப்பு நிற தலை கொண்டு அதில் முன் மார்புக் கவசத்துடன் காணப்படும். 
 
                      - கூட்டுப்புழு: வெள்ளை நிற கூண்டுப்புழுவாதலால்      நெற்பயிர் தண்டுகளுக்குள்ளே ஏற்படும், அல்லது வைக்கோல் மற்றும் பயிர்த் துார்களின்      உள்ளேயும் ஏற்படும். 
 
                      - அந்துப்பூச்சி: 
 
                      - பெண் அந்துப்பூச்சி: முன் இறக்கைகளின் நடுப்பகுதி நன்கு பிரகாசமான மஞ்சளான பழுப்பு நிறத்தில் கருப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். மேலும் அதன் மலப்புழைப் பகுதியில் மஞ்சள் நிற மயிர்கற்றை இருக்கும். 
 
                        ஆண் அந்துப்பூச்சி: சிறிய மற்றும் வெளிரிய மஞ்சள் நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும். இதில் கருப்புப் புள்ளிகள் இருக்காது. 
                                        | 
                
                
                   | 
                
                
                  கட்டுப்படுத்தும் முறை:  
                      பொருளாதார சேத நிலை அளவு: 25%"குருத்து காய்தல்" அல்லது 2 முட்டை குவியில்/மீட்டர்  
                    
                      - முட்டை      ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் எக்டருக்கு 5 மி.லி வீதம் இரண்டு முறை      நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.நாற்றுக்களை நெருக்கமாக நடுதலைத் தவிர்க்க வேண்டும்.
 
                      - வேப்பக் கொட்டைச் சாறு தெளிப்பதன் மூலம் தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்தலாம்
 
                      - நாற்று நடும் போது நாற்றின் நூனியை கிள்ளி விடுவதால் தண்டுத் துளைப்பானின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது
 
                    |