ஒரைக்டஸ் ரைனோசெரஸின் முதிர் வண்டுகள் 30-57 மி.மி.  நீளமும் 14-21 மி.மீ. அகலமுமு் கொண்ட பெரிய வண்டாகும். இது கருப்பு அல்லது சிவப்பு  கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும். இது தடித்த வடிவத்துடன், வண்டுகளில் முன்புறத்தில்  கொம்பு போன்ற அமைப்பு காணப்படும். 
               வாழ்க்கை சுழற்சி :  
              வெள்ளை கலந்த பழுப்புநிற முட்டைகள்  3-4 மி.மீ. நீளம், இருக்கும் முட்டை பொரிவதற்கு 8 முதல் 12 நாட்கள் ஆகும். இந்த வண்டுகள்  உரக்குழிகளில் முட்டைகளை இடும். புழுக்கள் பண்ணைக் குழிகளில் வளரும். முதல் பருவ புழுவின்  வளர்ச்சி பருவம் 10 முதல் 21 நாட்கள், 2வது பருவ புழுக்கள் 12 முதல் 21 நாட்கள், 3வது  புழுக்கள் 60 முதல் 165 நாட்கள், கூட்டுப்புழு ஆவதற்கு முன் 8 முதல் 13 நாட்கள் மற்றும்  கூட்டுப்புழு 17 முதல் 28 நாட்கள் ஆகும். முதிர்ந்த புழுக்கள் U வடிவத்தில்  பழுப்பு நிற தலை மற்றும் கால்களுடன் காணப்படும்.  4 முதல் 9 மாதங்களில் வாழ்க்கை சுழற்சி முடிவடைகிறது. இந்தியாவில் முதிர் வண்டுகளில்  ஆயுட்காலம் 4.7 மாதங்கள் மற்றும் பெண் வண்டுகளின் முட்டையிடும் திறன் 108 முட்டைகளாக  இருக்கின்றன. 
              தென்னை  காண்டாமிருக வண்டு, ஒரைக்கடஸ் ரைனோசெரஸின் கட்டுப்பாட்டிற்கான ரினோலுயூர் 
                ரினோலுயூர் என்பது தென்னை காண்டா மிருக வண்டின்  ஆண் மற்றும் பெண் வண்டுகளை மொத்தமாக பிடிக்கும்  இன்கவர்ச்சிப் பொருளாகும். இந்தக் கலவை கவர்ச்சிப் பொருளில், 4.மீத்தைல் ஆக்டோனேட்  உள்ளது. இந்தப் பொருள் சிறு பாக்கெட்டுகளில் நுரை போன்ற கலவையில் வழங்கப்படுகிறது.  இந்த இனக்கவர்ச்சிப் பொறியை எக்டரக்கு ஒன்று விதத்தில் வைத்தால் நல்ல பலன் தரும்.  இந்தக் வேதிக் கரைசலை ஒரு கலனில் வைத்து, அதை ஒரு வாளியின் மேற்புற மூடியில் மறைத்து  வைக்க வேண்டும். நேரிடையாக சூரிய ஒளி பட்டு இனக்கவர்ச்சிப் பொருளின் செயல்திறன் பாதிக்காமல்  இருக்க இவ்வாறு செய்யப்படுகிறது. வாளியில் துளைகளும், பக்கவாட்டில் சொசொரப்பான பரப்புகளும்  மேற்புற முடிக்கு சற்று கீழே இருக்கும்.எனவே, வண்டுகள் கவரப்பட்டு இந்த சொரசொரப்பில்  பட்டு பின் துளைகள் வழியே உள்ளே செல்லும். 
               தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேளாண் சேவை மையங்களில்  ரினோலுயூர் கிடைக்கின்றன. இந்த இனக்கவர்ச்சிப் பொறியன் விலை 400 லிருந்து -450 ரூபாய்  வரை இருக்கும். ரினோலுயூர் கீழ்க்கண்ட பெயர்களில் வெளிவருகின்றன. 
              
                 1. ரினோலுயூர் பொறி (கெமிக்டிக்கா லிமிடெட்) இந்தியாவில்  இதை வழங்குபவர்கள், கெம் கெஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், செம்மனூர், திருச்சூர் 
                  2. ரினோலுயூர் பொறி, பி.சி.ஐ இந்தியா லிமிடெட்,  பெங்களூர் 
                  3. ரினோலுயூர் பொறி, ப்ரூக் லேண்ட்ஸ், பெங்களூர் 
                4. உள்ளூர் முகவரிகள் 
                
                  அ) பூச்சிக் கட்டுப்பாடு இந்தியா லிமிடெட், கார்த்திக் அசோசியேட்ஸ் 
                  1669, திருச்சி ரோடு, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அருகில் 
                  ராமநாதபுரம், கோயமுத்தூர் - 18 
                  (கைபேசி: 9442159462) 
                ஆ) அம்மன் ஏஜென்சீஸ், 
            7 நியூ ஸ்கீம் ரோடு,  காந்தி சிலை அருகில்,  பொள்ளாச்சி               
                இ) தமிழ்நாடு வேளாண் மையம்,  கோவை ரோடு,  பொள்ளாச்சி                   
                ஈ) எஸ்.எஸ்.பூச்சிக் கொல்லிகள்,  உடுமலை ரோடு,  பொள்ளாச்சி                          |