பயிர் பாதுகாப்பு :: துவரை பயிரைத் தாக்கும் பூச்சிகள்
துவரை காய் ஈ : மெலோனோகுரோழைமசா அப்டியூசா

அறிகுறிகள்:

  • அடர் பழுப்பு படிவுகள் காயின் மேல்புறத்தில் காணப்படும்.
  • காய்ந்த காய்களில் ஊசி போன்ற துளைகள் காணப்படும்.
  • விதைகள் சுருங்கி, கோடுகளுடன், பகுதி உண்ண நிலையில் இருக்கும்.
  • துவரை காய் ஈ மென்மையான விதைகளை துளையிட்டு சேதம் ஏற்படுத்துவதுடன்  தானியங்களை உண்கிறது.
  • சேதமடைந்த விதைகள் முளைப்புத் திறனை இழப்பதுடன், உண்பதற்கு    ஏதுவாக இருக்காது.
  • கடுமையான சேதநிலையில்,  60-70% சேதம் ஏற்படுகிறது.  
 

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டைகள் தனியாக அல்லது கூட்டமாக  துளையிடுதல் மூலம் காயின் உள்ளே இடபடுகின்றன. ஈ 60-80 முட்டைகள் இடும். அடைகாக்கும் காலம் 2-4 நாட்கள்
  • புழு: புழு காலம் 5-18 நாட்கள்.
  • கூட்டுப்புழு:  கூட்டுபுழுவின் காலம் 7-10 நாட்கள்.
புழு தாய்ப்பூச்சி

கட்டுப்பாடு:

  • நன்மை தரும் பூச்சிகளான  யுடிரஸ்லிவிடஸ் , யுரிடோமா வகைகள் மற்றும்  யுடிரஸ் அக்ரோமைசேவை பாதுகாக்க வேண்டும்.
  • கார்பரில் 50 டபிள்யு பி 1.5 கிலோ, லம்பட ச்ய்ஹலோத்ரின் 5 இசி  400 -500 மிலி லுபினுரோன் 5.4 இசி 2.5 லி ஐ  700 லி தண்ணீரில்  கலந்து ஒரு ஹெக்டருக்கு  தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015