பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலை சுருட்டுப்புழு : நெப்லோகுரோசிஸ் மெடினேலிஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இளம் புழுக்கள் இலைகளை ஒட்டும் தன்மையுடன் நீளவாக்கில் சுருட்டி குழாய் போன்று அமைத்துக் கொள்ளும்
  • இலையின் மடிப்பிற்குள் இருந்து கொண்டு புழுக்கள் பச்சைப்பகுதியை சுரண்டித் திண்ணும்
  • சுரண்டப்பட்ட இலைகள் நரம்பு போல் ஆகி பின்பு வெண்மையாகி உதிர்ந்துவிடும்
இலைகளின் உள்ளே புழுக்கள் இருக்கும் சுரண்டப்பட்ட இலை பகுதிகள் உதிர்ந்துவிடும் புழுக்கள் பச்சைப்பகுதியை சுரண்டித் திண்ணும் இலைகள் நீளவாக்கில் சுருட்டபட்டிருக்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: ஒவ்வொரு பெண் பூச்சியும் இலையின் இரு பக்கங்களிலும் சுமார் 300 முட்டைகள் இடும் தன்மையுடையது. முட்டைகள் நீளமாகவும், வெண் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.
  • புழு: மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில், பழுப்பு அல்லது கருப்பு நிறத் தலையுடன் புழுக்கள் இருக்கும்.
  • கூட்டுப்புழு: கூட்டுப்புழு முதலில் பழுப்பு நிறத்தில் தோன்றி பின்னர், அடர் பழுப்பு நிறத்திற்கு மாறும். இலை மடிப்பில் கூட்டுப்புழு உண்டாகிறது.
  • பூச்சி: வெண் மஞ்சள் அல்லது தங்க மஞ்சள் நிறத்தில் முன் இறகுகளில் மூன்று கரும்கோடுகளுடன் காணப்படும்
முட்டை புழு கூட்டுப்புழு முதிர்பூச்சி்

கட்டுப்படுத்தும் முறை:

  • தானிய வகையல்லாத பயிர்களுடன் பயிர் சுழற்சி முறையை கடைபிடித்தல்
  • வயலைச் சுற்றிலும் உள்ள புல்வெளியை பராமரிக்கவேண்டும்
  • மிக அருகில் நடவு செய்வதை தவிர்க்கவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கவேண்டும்.
  • குளோர்பைரிபாஸ் 2.5 மில்லி அல்லது, குயினெல்பாஸ் 2.5 மில்லி அல்லது அசிபேட் 1 கிராம் அல்லது கார்பரில் 3 கிராம் அல்லது கார்டாப் ஹைடிரோகுளோரைடு 2 கிராம்/லிட்டர் போன்ற பூச்சிக்கொல்லிகளில் ஏதாவது ஒன்றை 10 நாட்கள் இடைவெளியில், இருமுறை தெளிக்கவேண்டும். பின்னர் கார்டாப் ஹைடிரோகுளோரைடு 4 G 10 கிலோ/ஏக்கர் இடவேண்டும்.
  • 5% வேப்பங்கொட்டை கரைசல் அல்லது 0.5% வேப்பெண்ணெய் அல்லது பிற உயிரியற் பூச்சிக் கொல்லியை 300 பிபிஎம் @ 1.5 லிட்டர்/ஹெக்டேர் அல்லது 1500 பிபிஎம் 1.5 லிட்டர்/ஹெக்டேர் என்ற அளவில் தழைகளில் தெளிக்கவேண்டும்.
  • நடவு செய்த 15 ஆம் நாளில் இருந்து டிரைகோகிராமா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை @1 லட்சம்/ஹெக்டேர் என்ற அளவில் 7-10 நாட்கள் இடைவெளி விட்டு, 5 முதல் 6 முறை வயலில் வெளியிடவேண்டும்.
  • பேசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் சார்ந்த உயிரியற் பூச்சிக் கொல்லிகளை @ 1 கிலோ அல்லது 1 லிட்டர்/ஹெக்டேர் 7-10 நாட்கள் இடைவெளியில் மாலை நேரத்தில் தெளிக்கவேண்டும்.
  • விளக்குப்பொறி அல்லது இனக்கவர்ச்சிப் பொறி வைக்கவேண்டும்.
  • வயலின் குறுக்கில் கயிறு போட்டு இழுத்து, இலைச் சுருள்களில் இருக்கும் புழுக்களை கீழே விழ வைக்கலாம்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015