பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினி: ராப்லோஸ்பியம் மெய்டிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகின்றன
  • முதிர் பூச்சிகள் மற்றும் குஞ்சுகளும் பயிரின் இளம் தண்டிலும், இலையின் அடிப்பாகத்திலும் காணப்படும்.
  • அசுவினியின் உடம்பிலிருந்து வெளிவரும் தேன் துளி போன்ற கழிவுப்பொருட்கள் இலைகளில் படிவதால், எறும்புகளுக்கு உணவாகிறது மற்றும் கரும்புகை பூசணம் உருவாக ஏதுவாகிறது.
இலைகளில் அசுவினிகள் கூட்டமாக காணப்படும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் தண்டின் மீது அசுவிணிகள் காணப்படும் கதிரின் மீது எறும்புகள் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • இளம்குஞ்சு:வட்ட வடிவில் சிகப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காணப்படும்
  • அசுவினி: மஞ்சள் நிறத்தில் அடர் பச்சை நிற கால்களுடன் காணப்படும்
குஞ்சுகள் முதிர் பூச்சிகள்

கட்டுப்படுத்தும் முறை:

  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து அதிகக் கொள்ளளவு மருந்து தெளிப்பான் மூலம் தெளிக்கவும்
    • மீத்தைல் திமத்தான் 25 EC 20 மி.லி/ஹெக்டேர்
    • தைமீத்தோயேட் 30 EC 20 மி.லி/ஹெக்டேர்ஹெக்டேர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015