பயிர் பாதுகாப்பு :: கேழ்வரகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கதிர்நாவாய் பூச்சி: காலோகோரிஸ் அன்குஸ்டேட்டஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பூச்சிகள் பூக்கும் பருவத்திற்கு முன் தோன்றி, பால் பருவம் வரை இருக்கும். பால் பருவத்தில் கதிர் இருக்கும் பொழுது குஞ்சுகளும், முதிர் பூச்சிகளும் தானியத்தில் உள்ள சாற்றை உறிஞ்சி விடுகிறது.
  • இந்த தாக்கத்தினால் தானியத்தின் தரம் குறைவதோடு, பாதிக்கப்பட்ட தானியம் உண்ண தகுதியற்று போகிறது.பூச்சித்தாக்கம் தீவிரமடையும் பொழுது கதிர் பதராகிறது.
  • பூச்சியின் பாதிப்பு முளைப்புத் திறனை குறைப்பதோடு, தானியங்களை பூசணத் தாக்கத்திற்கு ஏதுவாக்குகிறது.
கதிர்கள் பதராக மாறும் இலைகளில் பூச்சிகள் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: கொம்பை மற்றும் மத்திய மலர் பிரிவுகளுள் நீல நிறத்தில், சிகார் வடிவத்தில் முட்டைகள் காணப்படும்
  • குஞ்சுகள்: மெலிதாக பச்சை நிறத்திலிருக்கும்
  • பூச்சி: ஆண் பூச்சி பச்சை நிறத்தில் இருக்கும். பெண்பூச்சி பச்சை நிறத்தில், பழுப்பு நிற விளிம்புகளுடன் காணப்படும்
முட்டை குஞ்சுகள்

கட்டுப்படுத்தும் முறை:

  • கார்பரில் 50 WP @ 1 கிலோவை 500 லிட்டர் தண்ணீர்/ஹெக்டேர் மருந்தை பால் பருவத்தில்தெளிக்க வேண்டும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015