| பயிர் பாதுகாப்பு  :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள் | 
             
           
         
       
        
          
            வெள்ளை  ஈ: பெமீசியா டபாசி  
              தாக்குதலின் அறிகுறிகள்: 
              
                - வெளிப்பச்சை      புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும். இலைகள் அடிப்புறத்தில் சுருண்டு பிறகு      காய்ந்து விழுந்துவிடும்.
 
                - இலைகள்      மஞ்சளாக மாறும்
 
                - பூச்சிகளின்      தேன் போன்ற கழிவுப் பொருளின் படிவால் இலைகளில் கருமையான பூசணம் வளரும்
 
               
              பூச்சியின் விபரம்: 
              
                - முட்டை: இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில்      காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள் நிற முட்டை காணப்படும்
 
                - இளம்குஞ்சுகள்: பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன் இருக்கும்
 
               
              
                - முதிர்பூச்சிகள்: பூச்சியானது வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறிய இறகுடன் காணப்படும். இறகானது வெள்ளை நிறத்துடன் கால்களானது வளர்ச்சியடைத்து காணப்படும்.
 
               
              கட்டுப்படுத்தும் முறை: 
              
                - சரியான சமயத்தில் நீர் பாய்ச்சுதல் அவசியம்.
 
                - வயலைச் சுற்றிலும் உள்ள சோலானப்சிஸ் வகை குடும்பத்தைச் சேர்ந்த செடிகளை அகற்ற வேண்டும்.
 
                - டைமீத்தோயேட் 0.3% என்ற அளவில் தெளிக்கவும்
 
              | 
              | 
              | 
           
          
            | கூட்டுப்புழு  | 
            முதிர்ப்பூச்சி | 
           
          
              | 
           
         
         
 |